பிரதமர் துறை அமைச்சர் வான் ஜுனைடியின் மனைவி டத்தின் ஸ்ரீ ஃபியோனா காலமானார்

கூச்சிங்: பிரதமர் துறை அமைச்சர் (நாடாளுமன்றம் மற்றும் சட்டம்) டத்தோஸ்ரீ வான் ஜுனைடி துவாங்கு ஜாபரின் மனைவி டத்தின் ஸ்ரீ ஃபியோனா வான் ஜுனைடி  இன்று (மே 27) காலமானார்.

அவர் மாலை 6.12 மணியளவில் இறந்துவிட்டதாக அவரது மகள் ஷரீபா நோங்-ஜசிமா சையத் ஜுனைடி RTM இடம் தெரிவித்தார். இங்குள்ள போர்னியோ மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சனிக்கிழமை (மே 28) காலை 9 மணிக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறும். அதைத் தொடர்ந்து காலை 10 மணிக்கு Samariang கல்லறையில் அடக்கம் செய்யப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here