எங்கள் மகளின் இழப்பை ஏற்று கொள்கிறோம்; பேருந்து ஓட்டுநரை குறைகூறவில்லை

சிப்பாங், “எங்கள் மகள் இறந்துவிட்டதை நானும் எனது கணவரும் ஏற்றுக்கொண்டோம். பள்ளி பேருந்து ஓட்டுநரிடம் எங்களுக்கு எந்தவிதமான தவறான உணர்வும் இல்லை” என்று பள்ளி பேருந்து மோதியதில் இறந்த 16 மாத சிறுமியின் தாய் கூறினார்.

37 வயதான ஜைனப் மொஹிதீன் அப்துல் காதர் , 50 வயதான பேருந்து ஓட்டுநருக்கு எதிராக காவல்துறை எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்காது என்று நம்புவதாகவும் கூறினார். பேருந்து ஓட்டுநரை நாங்கள் இன்னும் சந்திக்கவில்லை, ஏனென்றால் அவர் இன்னும் மன உளைச்சலில் இருக்கிறார். இருப்பினும் அவர் என்னை அழைத்து மன்னிப்பு கேட்டார்.

பேருந்து ஓட்டுநரை நான் குற்றம் சொல்ல முடியாது. ஏனென்றால் அவர் ஏற்கனவே இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும், அவருக்கும் உடல்நிலை சரியில்லை, அவருடைய பேருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று அவர் வெள்ளிக்கிழமை (மே 27) தனது வீட்டில் செய்தியாளர்களிடம் கூறினார்.

சிற்றுண்டிசாலை உதவியாளராக பணிபுரியும் ஜைனப், ஏழு குழந்தைகளில் தனது இளையவரின் மரணம், குடும்பத்தில் ஆழமான வடுவை ஏற்படுத்தியதாகவும், ஆனால் பேருந்து ஓட்டுநரை மன்னிக்க தயாராக இருப்பதாகவும் கூறினார். விபத்து நடந்த அன்று, தானும் தனது கணவரும் வேலையில் இருந்ததாகவும், அவர்களின் குழந்தைகளை தனது மாமியார் கவனித்து வருவதாகவும் அவர் கூறினார்.

பாதிக்கப்பட்டவரின் மூத்த சகோதரி நூருல் ஆயிஷா 13, சம்பவத்தின் போது, ​​தனது எட்டு வயது சகோதரி பாக்கெட் பணத்தை கொடுத்துவிட்டு தான் பேருந்தில் இருந்து இறங்கியதாக கூறினார். அக்காவிடம் காசு கொடுத்துவிட்டு பேருந்தை விட்டு இறங்கினேன்.பேருந்து நகர்வதை பார்த்தேன்.அதே நேரத்தில் பேருந்தின் அடியில் ஜாஹிதாவையும் பார்த்தேன்.பேருந்தின் பின்பக்க டயர் மீண்டும் அவளை தாக்கும் முன் வேகமாக அவளை பிடித்தேன்.

நான் கூச்சலிட்டேன், உடனடியாக ஜாஹிதாவை வீட்டிற்குள் தூக்கிச் சென்றேன். என் அயலவர்கள் வந்து ஜாஹிதாவையும் என்னையும் என் பாட்டியையும் அருகிலுள்ள சுகாதார மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் என்று அவர் கூறினார்.

ஜாஹிதா தாக்கப்பட்டதை உணர்ந்ததும், பஸ் டிரைவர் உடனடியாக இறங்கி தனது பாட்டியிடம் மன்னிப்பு கேட்டதாக நூருல் ஆயிஷா கூறினார். முதலில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள் என்று பேருந்து ஓட்டுநரிடம் என் பாட்டி சொல்லிவிட்டு, குழந்தைகளை அனுப்பி முடித்ததும், அவர் திரும்பி வந்து ஜாஹிதாவின் உடல்நிலை குறித்து கேட்டார்.

ஜாஹிதா ஒரு மகிழ்ச்சியான சகோதரி என்றும், தனது உடன்பிறப்புகளையும் பின்பற்றுவார் என்றும், தனது தந்தை மற்றும் பாட்டியுடன் மிகவும் நெருக்கமாக இருந்ததாகவும் அவர் கூறினார்.

சிப்பாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி வான் கமருல் அஸ்ரான் வான் யூசோப் கூறுகையில், பேருந்து ஓட்டுநர் வாக்குமூலத்தை அளித்த பின்னர் நேற்றிரவு போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். நாங்கள் விசாரணையை முடித்து, விசாரணை அறிக்கையை அடுத்த நடவடிக்கைக்காக அரசு வழக்கறிஞரிடம் சமர்ப்பிப்போம் என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here