இறுதிச் சடங்குதொடர்பான விஷயங்களுக்காக லஞ்சம் வாங்கியது தொடர்பில், சுகாதார உதவியாளர்கள் இருவர் கைது

ஷா ஆலாம், மே 27 :

இறுதிச் சடங்குகள் தொடர்பான விஷயங்களுக்காக தலா 15,000 வெள்ளி வரை லஞ்சம் கேட்டது மற்றும் வாங்கியது தொடர்பில், இரண்டு சுகாதார உதவியாளர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆதாரங்களின்படி, முறையே 42 மற்றும் 40 வயதுடைய இரண்டு ஆண் சந்தேக நபர்கள் சிலாங்கூர் MACC இல் சாட்சியமளிக்க வந்தபோது, நேற்று மாலை 4.45 மணியளவில் கைது செய்யப்பட்டனர்.

மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணிபுரிந்த இரண்டு சந்தேக நபர்களும் குறிப்பிட்ட நபர்களிடமிருந்து ஒவ்வொரு இறுதிச் சடங்குகளுக்கும் RM300 லஞ்சம் கேட்டு பெற்றதாக நம்பப்படுகிறது.

2018 முதல் 2021 வரையிலான காலப்பகுதிக்கான இறுதிச் சடங்கு நிர்வாகப் பணிகளை, சம்பந்தப்பட்ட தரப்பினர் தொடர்ந்து பெறுவதற்கு இந்த லஞ்சம் பிரதிபலனாகும் எனத் தெரிகிறது.

இதற்கிடையில், சிலாங்கூர் MACC இயக்குநர் டத்தோ அலியாஸ் சலீம் அவர்கள் கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினார், மேலும் இந்த வழக்கு MACC சட்டம் 2009 இன் பிரிவு 17 (ஏ) இன் கீழ் விசாரிக்கப்படுவதாக கூறினார்.

சந்தேகநபர்கள் இருவரும் இன்று நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here