கை, கால் மற்றும் வாய் நோய் காரணமாக சமூக மேம்பாட்டுத் துறையின் கீழுள்ள 105 பாலர் பள்ளிகள், 75 குழந்தை பராமரிப்பு மையங்கள் மூடப்பட்டன

குவாந்தான், மே 28 :

நேற்றைய நிலவரப்படி, கை, கால் மற்றும் வாய் நோய் (HFMD) காரணமாக சமூக மேம்பாட்டுத் துறையின் (KEMAS) கீழுள்ள மொத்தம் 180 பாலர் பள்ளிகள் (tabika) மற்றும் குழந்தை பராமரிப்பு மையங்கள் (taska) மூடப்பட்டுள்ளன.

ஊரக வளர்ச்சி அமைச்சர் டத்தோஸ்ரீ மஹ்ட்சீர் காலிட் கூறுகையில், நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்காவைத் தவிர நாடு முழுவதும் 105 பாலர் பள்ளிகள் மூடப்பட்டதாகவும், மீதமுள்ளவை (75) குழந்தை பராமரிப்பு மையங்களுமாகும் என்றார்.

கண்டறியப்பட்ட ஒவ்வொரு வழக்கும் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படும் என்பதால், சுகாதார அமைச்சகத்தின் (MOH) ஆலோசனை மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் அவ்வளாகங்களை மூடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

“இந்த வளாகங்கள் 10 நாட்களுக்கு மூடப்படும் மற்றும் கிருமிநாசினி தெளிப்பு உள்ளிட்ட பொருத்தமான நடவடிக்கைகள் கேமாஸ் அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும்,” என்று அவர் இன்று இங்குள்ள கேமாஸ் பகாங் ஊழியர்களுடன் நடந்த, ஒரு சந்திப்பு மற்றும் அய்டில்ஃபித்ரி கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இவ்வாறு மூடப்படும் காலத்தில், கோவிட்-19 தொற்றுநோய்களின் போது ஏற்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் வீட்டு அடிப்படையிலான கற்பித்தல் மற்றும் கற்றல் (PdPR) அமர்வுகள் நடத்தப்படும்.

MOH நிர்ணயித்த நிலையான இயக்க நடைமுறைகளின் (SOP) அடிப்படையில், கேமாஸ் கண்காணிப்பு நடத்தி, தங்கள் வளாகத்தில் நோய் பரவுவதைத் தடுக்க முனைப்புடன் செயல்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

உடலின் வெப்பநிலை பரிசோதனை, அதே போல் தோலில் சொறி அல்லது கொப்புளங்கள், காய்ச்சல் மற்றும் வாய் புண் போன்ற பிற HFMD அறிகுறிகளுக்கான பரிசோதனையும் வளாகத்தின் நுழைவாயிலில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

“அனைத்து பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பதையும் எந்த அறிகுறிகளும் இல்லை என்பதையும் உறுதிப்படுத்துவதன் மூலம் HFMD பரவுவதைத் தடுக்க எங்களுக்கு உதவுவார்கள் என்று நம்புகிறோம்.மேலும் உடன்பிறந்தவர்களுக்கு அறிகுறிகள் இருந்தால், தடுப்பு நடவடிக்கையாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நர்சரிகள் அல்லது பாலர் பள்ளிகளுக்கு அனுப்பக்கூடாது, ”என்று அவர் கூறினார்.

சமூக மேம்பாட்டுத் துறையின் கீழ் நாடு முழுவதும் 10,765 பாலர் பள்ளிகளையும் 549 குழந்தை பராமரிப்பு மையங்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here