ஜெலுபு சிறையில் இருந்து தப்பி சென்ற கைதி மீண்டும் கைது

 ஜெலுபு சிறையிலிருந்து கடந்த மாதம் தப்பிச் சென்ற கைதி வியாழக்கிழமை (மே 26) அசாம் ஜாவா, கோலா சிலாங்கூரில் உள்ள ஒரு பட்டறையில் மீண்டும் பிடிபட்டார். கோலா சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் ராம்லி காசா, 32 வயதான முஹம்மது சயபிக் ரோஹ்மத், மேலும் 23 வயதுடைய இருவர்களுடன் காலை 5.30 மணியளவில் கைது செய்யப்பட்டதாகக் கூறினார்.

பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், மாவட்ட போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு  மற்றும் கோலா சிலாங்கூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அந்த மூன்று பேரைக் கைது செய்தனர் என்று அவர் கூறினார்.

கைது செய்யப்பட்ட நேரத்தில் 455.6 கிராம் எடையுள்ள ஹெராயின் இருப்பதாக நம்பப்படும் 8 வெளிப்படையான பாக்கெட்டுகளையும், 24 கிராம் எடையுள்ள சியாபு என நம்பப்படும் இரண்டு பாக்கெட்டுகளையும் போலீசார் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு ரிங்கிட் 17,400 ஆகும் என்று  ராம்லி இன்று(மே 29) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.  முஹம்மது சயபிக் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஜெலுபு மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் ஒப்படைக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here