காதல் மோசடியில் சிக்கி, 68 வயது மூதாட்டி ஒருவர் அரை மில்லியன் வெள்ளிக்கு மேல் இழந்தார்

தைப்பிங், மே 30 :

கடந்த ஆண்டு சமூக ஊடகங்கள் மூலம் தன்னை ‘டாக்டர் ’ என்று அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவரின் காதல் மோசடியில் சிக்கி, கடைக்கார மூதாட்டி ஒருவர் RM565,700 இழந்துள்ளார்.

தைப்பிங் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் ஒஸ்மான் மாமட் கூறுகையில், பாதிக்கப்பட்ட 68 வயதான பெண், கடந்த ஆண்டு ஈராக்கில் பணிபுரியும் மருத்துவர் என்று கூறிய ஒருவருடன் அறிமுகமானார்.

டிங் நை வேய் என்ற பேஸ்புக் பயனரைப் பயன்படுத்தி அந்த மூதாட்டி ஏமாற்றப்பட்டார்,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

தான் ஈராக்கில் இருந்து வெளியேறுவதற்காக, ஐக்கிய நாடுகள் சபைக்கு செலுத்த ஒரு தொகை பணத்தை மாற்றுமாறு பாதிக்கப்பட்டவரிடம் சந்தேக நபர் கெஞ்சினார் என்றும், அவர் மலேசியாவிற்கு வந்ததும் பாதிக்கப்பட்டவருக்கு 5 மில்லியன் ரிங்கிட் கொடுப்பதாக உறுதியளித்ததாகவும் ஒஸ்மான் கூறினார்.

அக்டோபர் 4, 2021 முதல் இந்த ஆண்டு மே 21 வரை மே பேங்க், தைப்பிங் கிளையில் 69 ஏடிஎம் பரிவர்த்தனைகளைச் செய்யுமாறு சந்தேக நபர் பாதிக்கப்பட்ட பெண்ணை தூண்டி, தனது வலையில் சிக்க வைத்துள்ளார்.

“பாதிக்கப்பட்ட மூதாட்டி தங்கள் உறவு முழுவதும் சந்தேக நபரான ‘டாக்டரை’ சந்தித்ததில்லை, மேலும் +1(786)6526776 மற்றும் +1(984)3683962 என்ற வாட்ஸ்அப் பயன்பாட்டின் மூலம் மட்டுமே தொடர்பு கொண்டார்” என்று அவர் கூறினார்.

பாதிக்கப்பட்ட பெண், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து நேற்று மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் காவல்நிலையத்தில் புகார் அளித்ததாக ஒஸ்மான் கூறினார், மேலும் இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் 420வது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here