கோலாலம்பூர்:
தாமான் தான் யூ லாய் என்ற இடத்தில் உள்ள ஒரு கடையில் போலீசார் நடத்திய சோதனையைத் தொடர்ந்து, தலைநகரைச் சுற்றி கெத்தும் இலைகளைக் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் 11 உள்ளூர் ஆடவர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 27 முதல் 47 வயதுடைய ஆண்கள், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 8.50 மணியளவில், கெத்தும் இலைககளை குறித்த கடை வளாகத்தின் முன் மாற்றியபோது கைது செய்யப்பட்டனர் என்று, பிரிக்ஃபீல்ட்ஸ் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி கு மஷாரிமான் கு மமூட் கூறினார்.
“லோரி ஓட்டுநராகப் பணிபுரியும் சந்தேக நபர் ஒருவர் மூன்று மாதங்களாக கெத்தும் இலைகளை கடத்துவதில் ஈடுபட்டு வருவதாகவும், அண்டை நாட்டில் உள்ள ஒருவரிடமிருந்து கோலாலம்பூருக்கு வாராவாரம் குறித்த கெத்தும் இலைகள் விநியோகிக்கப்படுவதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று, அவர் சொன்னார்.
இந்த நடவடிக்கையில் 63,880 ரிங்கிட் மதிப்புள்ள 1,374 கிலோகிராம் கெத்தும் இலைகள் மற்றும் 50 லிட்டர் திரவ codeine ஆகியவை சோதனையின் போது கைப்பற்றப்பட்டதாகவும், சந்தேகநபர்கள் அனைவரும் நவம்பர் 16 முதல் 22 வரை ஏழு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.








