இறுதிச் சடங்கு தொடர்பில் ஊழல் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட, மூன்று சுகாதார ஊழியர்களுக்கு 5 நாட்கள் தடுப்பு காவல் உத்தரவு

ஷா ஆலாம், மே 31 :

மருத்துவமனைகளில் இறந்த நோயாளரின் இறுதிச் சடங்குகள் தொடர்பான வேலைகளுக்காக RM1,000 முதல் RM5,000 வரை ஊழல் செய்ததாக, குற்றஞ்சாட்டப்பட்ட மூன்று சுகாதாரப் பணியாளர்களை இன்று முதல் ஐந்து நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விண்ணப்பத்தைத் தொடர்ந்து, இரண்டு சுகாதார உதவியாளர்கள் மற்றும் ஒரு துணை மருத்துவ அதிகாரிக்கு எதிரான தடுப்பு காவல் உத்தரவு இன்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி முகமட் சயாபிக் சுலாமான் (rpt.சுலாமான்) பிறப்பித்தார்.

எம்ஏசிசி சட்டம் 2009 இன் பிரிவு 17 (ஏ) இன் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக 35 மற்றும் 38 வயதுடைய மூவரும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் 2018 முதல் 2021 வரையான காலப்பகுதியில் மருத்துவமனையில் இறக்கும் நோயாளர்களின் இறுதிச் சடங்குகளை செய்ய வாய்ப்பினை பெற்றுக் கொடுப்பதற்கு பதிலாக குறிப்பிட்ட சிலரிடம் லஞ்சம் கேட்டுப் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here