கோலாலம்பூர், ஜூன் 1 :
எதிர்வரும் 15-ஆவது பொதுத் தேர்தல் மலேசியாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் போட்டியாக இருக்கும் எனவும் கடுமையான போட்டி நிலவும் எனவும்ம் தாம் எதிர்பார்ப்பதாக தேசிய முன்னணி (BN ) மற்றும் அம்னோ துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ முகமட் ஹசான் தெரிவித்தார்.
தேசிய முன்னணி கட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கிறது என்பதற்காக அது மீண்டும் ஆட்சியமைக்கும் என்ற எண்ணத்தில் நாம் மயங்கிவிடக் கூடாது என்று, இன்று நடந்த தேசிய முன்னணியின் 48-ஆவது ஆண்டு நிறைவு விழாக்கொண்டாட்டத்தில், அவரின் உரையின்போது கூறினார்.
அவரைப் பொறுத்தவரை, அனைத்து இடைத்தேர்தல் மற்றும் மாநில தேர்தல்களில் அதாவது சபா, மலாக்கா மற்றும் ஜோகூரில் தமது கடைசி பெற்ற வெற்றிகளின் அடிப்படையில், எதிர்வரும் 15-ஆவது பொதுத்தேர்தலிலும் தேசிய முன்னணி கட்சியே வெல்லும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஆனால் “நாம் 15-ஆவது பொதுத்தேர்தலிலும் வெல்லுவோம், அத்தோடு நாம் அரசாங்கத்தை எளிதாகக் கட்டுப்படுத்தலாம் ” இவ்வாறு யாராவது நினைத்தால், அது தவறானது மட்டுமல்ல, அது தேசிய முன்னணிக்கு மிகவும் ஆபத்தானது .
“அத்தகைய அனுமானங்களை நாம் உடனடியாக அகற்ற வேண்டும் மாறாக அனைவரும் ஒருமித்து, உண்மையான மனநிலையுடன் ஆக்கபூர்வமான செயல்பாடுகளை சிந்தித்து, செயல்படுத்த வேண்டும் ,” என்று அவர் கூறினார்.
நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இந்த 12-ஆவது பொதுத்தேர்தலில் , புதிய சலுகைகள் மற்றும் திட்டங்களை தேசிய முன்னணி கட்சி சமூகத்திற்கு மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும்.
“மக்களால் நல்ல தீர்ப்பளிக்க முடியும் என்பதில் நம்பிக்கை வையுங்கள். அவர்களால் நடுநிலையாகவும் நியாயமாகவும் இருக்க முடியும். மக்கள் மீண்டும் ஏமாற மாட்டார்கள்” என்று அவர் மேலும் கூறினார்.








