துன்புறுத்தப்பட்டதாக வெளியான காணொளியில் இருக்கும் இருவர் மலேசியர்கள் அல்லர் என காவல்துறை தகவல்

இரண்டு நபர்கள் அச்சுறுத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டதாக சித்தரிக்கும் இரண்டு வீடியோக்கள் வெளிநாட்டில் நிகழ்ந்ததை  காவல்துறை (PDRM) உறுதிப்படுத்தியுள்ளது.

புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) இயக்குநர் டத்தோஸ்ரீ அப்த் ஜலீல் ஹாசனும் பாதிக்கப்பட்ட இருவர் — ஒரு ஆணும் பெண்ணும் — மலேசியப் பிரஜைகள் அல்ல என்பதை உறுதிப்படுத்தினார். இரண்டு வீடியோக்களும் பரவியதை போலீசார் கவனத்தில் கொண்டுள்ளனர் என்றார்.

54 வினாடிகள் ஓடும் முதல் வீடியோ, வியட்நாமியர் என்று நம்பப்படும் ஒரு பெண் பாதிக்கப்பட்டதைக் காட்டுகிறது. அதேசமயம் 47 வினாடிகள் கொண்ட இரண்டாவது வீடியோவில் ஆண் ஒருவர் இடம்பெற்றுள்ளார்.

பாதிக்கப்பட்ட இருவரும் படுக்கையில் கைவிலங்கிடப்பட்டனர் மற்றும் ஸ்டன் துப்பாக்கிகளால் அச்சுறுத்தப்பட்டனர் என்று அவர் இன்று இரவு ஒரு அறிக்கையில் கூறினார்.

இந்த வீடியோக்களின் நம்பகத்தன்மை கண்டறியப்படாததால், இந்த வீடியோக்களை பகிர வேண்டாம் என்றும், இது பொதுமக்களின் கவலையை ஏற்படுத்தும் என்று அஞ்சுவதாகவும் அப்துல் ஜலீல் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த வீடியோக்கள் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் முன் வருமாறு அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here