கோத்தா பாரு, ஜூன் 3 :
கடந்த ஞாயிற்றுக்கிழமை பதின்ம வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட கால்பந்து வீரர், இன்று போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
28 வயதுடைய சந்தேகநபருக்கு இன்று பிற்பகல் 2.30 மணியளவில் பிணை வழங்கப்பட்டுள்ளதாக கிளாந்தான் மாநில இடைக்கால போலீஸ் தலைவர் டத்தோ முகமட் சாக்கி ஹரூன் தெரிவித்தார்.
“நாங்கள் விசாரணை அறிக்கையை முடிக்க உள்ளோம், மேலும் இவ்வழக்கு துணை அரசு வழக்கறிஞர் விரைவில் பரிந்துரைக்கப்படும் ” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.
பதின்ம வயது பெண்பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் விசாரணைக்கு உதவுவதற்காக கிளாந்தானில் கால்பந்து வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக ஊடகங்கள் முன்பு செய்தி வெளியிட்டன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, பாதிக்கப்பட்ட 18 வயது பெண் அளித்த புகாரின் பேரில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, 28 வயதுடைய நபர் இங்குள்ள ஜாலான் பந்தாய் சஹாயா புலானில் கைது செய்யப்பட்டார்.









