காணாமல் போன மீனவர் சுங்கை பொந்தியான் பெசார் அருகே இறந்து கிடக்க கண்டெடுக்கப்பட்டார்

பொந்தியான், ஜூன் 4 :

இங்குள்ள சுங்கை பொந்தியான் பெசார் அருகே வியாழக்கிழமை (ஜூன் 2) முதல் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த மீனவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

சனிக்கிழமை (ஜூன் 4) காலை 9.40 மணியளவில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த உள்ளூர் மீனவர்களால், 56 வயதான அபுபக்கர் முகமட்டின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக ஜோகூர் மலேசிய கடல்சார் அமலாக்க முகமைத்துறை இயக்குநர் முதல் அட்மிரல் நூருல் ஹிசாம் ஜகாரியா தெரிவித்தார்.

“சுங்கை பொந்தியான் பெசார் முகத்துவாரத்திலிருந்து சுமார் 3.2 கடல் மைல் தொலைவில் சடலம் மிதந்து கிடக்க கண்டுபிடிக்கப்பட்டது. வியாழக்கிழமை மாலை காணாமல் போன இரண்டு மீனவர்களில் அவரும் ஒருவர்.

“மற்றய மீனவரான முகமட் காலித் (60) என்பவரின் உடல் புதன்கிழமை (ஜூன் 3) நண்பகல் 12.45 மணியளவில் அதே இடத்தில் கண்டெடுக்கப்பட்டது,” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

வியாழன் அன்று கடலுக்குச் சென்ற மீனவர்கள் இருவரும் வீடு திரும்பவில்லை என்பதால் அவர்களை தேடும் பணி ஆரம்பிக்கப்பட்ட்தாக அட்மிரல் நூருல் ஹிசாம் தெரிவித்தார்.

மீனவர்கள் கடலில் செல்லும்போது கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், ஏதேனும் அவசரத் தேவைகளுக்கு MERS 999 என்ற எண்ணை அழைக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here