பள்ளி விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களையொட்டி நாட்டின் பல முக்கிய நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

Along Karak highway jamm —LOW BOON TAT/THE STAR

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 4 :

சனிக்கிழமை (ஜூன் 4) பள்ளி விடுமுறைகள் தொடங்கியதால் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை மற்றும் கோலாலம்பூர் காராக் விரைவுச்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மலேசிய நெடுஞ்சாலை ஆணையம் இன்று (ஜூன் 4) வெளியிட்ட ஒரு டுவீட்டில், வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில், ஜூரு ஓய்வு பகுதியிலிருந்து ஜூரு டோல் பிளாசா மற்றும் புக்கிட் தம்புனில் இருந்து ஜாவி நோக்கி செல்லும் பகுதியில் போக்குவரத்து பதிவாகியுள்ளது என தெரிவித்துள்ளது.

மேலும் கூனுங் செமாங்கோல் ஓய்வு பகுதியிலிருந்து அலோர் பொங்சு வரை பண்டார் பாரு வரை வடக்கே போக்குவரத்து அதிகமாக உள்ளது என்றும் அது பதிவிட்டுள்ளது.

ஜாவியில் இருந்து பண்டார் காசியா மற்றும் ஜூரு முதல் சுங்கை துவா வரை அதே திசையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

“ஜோகூரில், ஸ்கூடாய் முதல் சேனாய், கூலாய் வரை கூலாய் ஓய்வு பகுதி, பாகோவிலிருந்து யோங் பெங் செலாத்தான், ஆயிர் ஈத்தாம் முதல் யோங் பெங் செலாத்தான் மற்றும் சிம்பாங் ரெங்காம் முதல் செடெனாக் வரை போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது.

மேலும் “யுபிஎம்மில் இருந்து நீலாய், ஐரம்பான் ஓய்வு பகுதி முதல் செனவாங் வரை செனவாங் முதல் போர்ட்டிக்சன் வெளியேறும் இடம் வரை, பெடாஸ் லிங்கி முதல் பெடாஸ் லிங்கி ஓய்வு பகுதி மற்றும் ஆயிர் கெரோஹ் ஜெஜந்தாஸ் ஓய்வு பகுதி மற்றும் சிம்பாங் அம்பாட் வரை கடும் போக்குவரத்து நெரிசல் உள்ளது” என்று அது கூறியது.

கோலாலம்பூர் காரக் விரைவுச்சாலையில், கோம்பாக் டோல் பிளாசாவிலிருந்து புக்கிட் திங்கி மற்றும் லெந்தாங் பெந்தாங் டோல் பிளாசாவை நோக்கி கிழக்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அத்தோடு காஜாங் -சிரம்பான் நெடுஞ்சாலையில் (லேகாஸ்) காஜாங் செலாத்தான் வெளியேறும் இடத்திலிருந்து காஜாங் செலாத்தான் டோல் பிளாசாவிற்கு தெற்கே செல்லும்பாதை, அதே போல் காஜாங் செலாத்தான் வெளியேறும் பகுதியிலிருந்து வடக்கே காஜாங் பெர்டானா வெளியேறும் வழியிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் பதிவாகியுள்ளது.

“ஜோகூர் காஸ்வேயில் இரு திசைகளிலும் போக்குவரத்து நெரிசல் உள்ளது” என்று அமேலும் அது கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here