ஈப்போவில் இருந்து 173 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெங்கலன் உலு, கம்போங் செலாரோங்கில் ஒருவர் தனது வீட்டின் பின்புறம் மண்ணை தோண்டியபோது ஏராளமான தோட்டாக்கள் மற்றும் பழைய கையெறி குண்டுகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
சம்பந்தப்பட்ட 50 வயது ஆடவர் மாட்டுத் தொழுவத்திற்காக கொண்டிருந்தார் என்று பெங்கலன் உலு மாவட்ட காவல்துறைத் தலைமை துணைக் கண்காணிப்பாளர் சுல்கிப்ளி இப்ராகிம் தெரிவித்தார். காலை 6 மணிக்கு கண்டுபிடிப்பு தொடர்பான தகவல் போலீசாருக்கு கிடைத்தது, விசாரணையில் வெடிகுண்டு 20 சென்டிமீட்டர் (செ.மீ.) சுற்றளவு மற்றும் 12 சென்டிமீட்டர் நீளம் கொண்ட பழைய கையெறி குண்டு என்று கண்டறியப்பட்டது.
கண்டுபிடிக்கப்பட்ட பல 7.62 மிமீ General Purpose Machine Gun (ஜிபிஎம்பி) தோட்டாக்கள் துருப்பிடித்துள்ளன என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, தைப்பிங் வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவு (UPB) மூலம் எந்த அசம்பாவிதமும் ஏற்படாமல் அழிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.
பேராக் காவல் படைத் தலைமையகத்தின் (ஐபிகே) ஆயுதப் பிரிவு (AMRA) மூலம் வெடிமருந்துகள் அகற்றப்படும் என்று அவர் கூறினார். எனவே, வெடிகுண்டுகள் அல்லது வெடிமருந்துகள் போன்ற ஏதேனும் பொருட்களைக் கண்டால், அவற்றைத் தொடவோ அல்லது நகர்த்தவோ வேண்டாம் என்றும், உடனடியாக அவற்றை அடுத்த நடவடிக்கைக்காக காவல்துறைக்கு தெரிவிக்குமாறும் அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.