கோலாலம்பூர், சிலாங்கூர் உள்ளிட்ட பகுதிகளில் பிற்பகல் 2 மணி வரை கனமழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்

கோலாலம்பூர், ஜூன் 5 :

இன்று பிற்பகல் 2 மணி வரை, கோலாலம்பூர், புத்ராஜெயா, சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலானின் பெரும்பாலான இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மெட்மலேசியாவின் கூற்றுப்படி, சிலாங்கூரில் கிள்ளான், பெட்டாலிங், கோலா லங்காட், உலு லங்காட் மற்றும் செப்பாங் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய சிலாங்கூர் மாநில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே சமயம் நெகிரி செம்பிலானில் ஜெலேபு மற்றும் சிரம்பான் ஆகிய பகுதிகளிலும் மேற்குறிப்பிட்ட வானிலை நிலவும் என நம்பப்படுவதாகவும் “இடியுடன் கூடிய மழையின் தீவிரம் 20 மிமீ/மணிக்கு மேல் இருக்கும் போது எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. அவை நெருங்கி அல்லது ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று அது தனது முகநூலில் இன்று வெளியிட்ட ஒரு பதிவில் தெரிவித்தது.

இந்த இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை,ஒரு குறுகிய கால எச்சரிக்கையாகும், இது ஆறு மணி நேரத்திற்கு மிகாமல் செல்லுபடியாகும் என்று அது மேலும் கூறியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here