நான் உயிருடன் இருக்கும் வரை என் கொள்ளு பேரப்பிள்ளைகளை பார்த்துக் கொள்வேன்

பாசீர் மாஸ், “நான் உயிருடன் இருக்கும் வரை, மூன்று கொள்ளுப் பேரக்குழந்தைகளையும் நான் கவனித்துக்கொள்வேன். உண்மையாக, அவர்களின் பராமரிப்பு செலவைப் பற்றி யோசிக்க நான் திணறுகிறேன். ஆனால் கடவுள் சித்தமானால், அவர்களை வளர்ப்பதற்கு வாழ்வாதாரம் இருப்பதாக நான் நம்புகிறேன் என்று  காரில் சுட்டு கொல்லப்பட்ட 7 மாத கர்ப்பிணியான ஃபர்ரா எமிரா மஸ்லானின் பாட்டியான 68 வயதான ஜாவியா சுலோங்கின் உறுதி மொழியாக இருக்கிறது.

பாதிக்கப்பட்டவரின் மூன்று குழந்தைகளான முகமட்  முஸ்தகிம் தர்விஷ் முஸ்தபா 10, நூர் பெலிசா எட்ரியானா 5, மற்றும் முகமட் புத்ரா ஃபாலிக் 3, ஆகியோரின் துயரத்தைப் பார்க்கத் தயாராக இல்லை என்று ஜவியா கூறினார். ஆனால் தொடர்ந்து வாழ ஆதரவும் அன்பும் தேவைப்படும் தங்கள் பேரக்குழந்தைகளுக்காக வலுவாக இருக்க வேண்டும். முகமட் புத்ரா ஃபாலிக் என்ன நடக்கிறது என்று புரியாமல் அம்மாவை கேட்டபோது எனக்கு வருத்தமாக இருந்தது. அவளுடைய அம்மா ‘வேலைக்கு வெளியே’ இருக்கிறாள் என்று நான் அவளிடம் சொல்ல வேண்டியிருந்தது, அதனால் அவள் அழுகையை நிறுத்தினாள்.

உயிரிழந்தவரின்  தாய் 47 வயதான சித்தி ஹாஜா, மூன்று உடன்பிறப்புகளின் பராமரிப்பை கவனிக்க வேண்டும் என்றார். மறந்தவரின் மறைவு மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. எனவே எங்களுக்கு கால அவகாசம் தேவை.எதார்த்தத்தை ஏற்றுக்கொள்வதில் நான் தொடர்ந்து வலுவாக இருக்க பிரார்த்திக்கிறேன்.என்ன நடந்தாலும் இவற்றை புறக்கணிக்க மாட்டேன். எனது மூன்று பேரக்குழந்தைகள் மற்றும் அவர்களை வளர்க்க தொடர்ந்து நல்ல ஆரோக்கியம் தரப்படும் என்று நம்புகிறேன் என்றார்.

கடந்த பிப்ரவரி மாதம் தனது முதல் திருமணத்தில் மூன்று பிள்ளைகளைப் பெற்று இரண்டாவது கணவரை விவாகரத்து செய்த பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் விசாரிக்கப்படும் நோக்கங்களில் பொறாமையும் ஒன்று என ஊடகங்கள் முன்னர் செய்தி வெளியிட்டிருந்தன. அந்த பெண் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதால், வயிற்றில் இருந்த குழந்தையும் உயிரிழந்தது. சம்பவத்தைத் தொடர்ந்து, விசாரணையில் உதவுவதற்காக அவரது முன்னாள் கணவர் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here