நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்குப் பிறகு GST-யை மீண்டும் நடைமுறைப்படுத்த குறைந்தது ஒன்பது மாதங்கள் ஆகும் என்கிறார் ஜஃப்ருல்

புத்ராஜெயா, ஜூன் 9 :

பொருள் மற்றும் சேவை வரியை (GST) நாடாளுமன்றம் அங்கீகரித்த பிறகு, அது மீண்டும் நடைமுறைக்கு வருவதற்கு குறைந்தது ஒன்பது மாதங்கள் ஆகும் என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

டத்தோஸ்ரீ தெங்கு ஜஃப்ருல் தெங்கு அப்துல் அஜிஸ் கூறுகையில், GST தொடர்பான ஆய்வு நடத்துதல் மற்றும் ஈடுபாடு உள்ளிட்ட செயல்முறைகளுக்கு நேரம் எடுக்கும் என்றார்.

அதாவது “GST-ஆல் நாட்டுக்கு நன்மை ஏற்படும் என்று ஆய்வில் தெளிவாகக் கண்டறியப்பட்டால் , அதன் பின்னரே அமைச்சரவையில் சமர்ப்பிப்போம். அதனைத்தொடர்ந்து, GST தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்று, பின்னர் அதை நிறைவேற்ற வேண்டும் என்றார்.

நேற்று நடைபெற்ற ஹரி ராயா திறந்த இல்ல நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாடாளுமன்ற ஒப்புதலின் பின்னர், அதைச் செயல்படுத்துவதற்கு குறைந்தது ஒன்பது மாதங்கள் ஆகும்.

மேலும் GST-யின் விகிதமும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளில் ஒன்றாகும் என்று தெங்கு ஜஃப்ருல் கூறினார்.

“மலேசியாவிற்கு நியாயமான விகிதம் என்ன என்பதை நாங்கள் ஆய்வு செய்ய வேண்டும். நாங்கள் மக்களுக்கு சுமைகளை ஏற்படுத்த விரும்பவில்லை, ஆனால் நாட்டின் வளர்ச்சி நோக்கங்களுக்காக வருவாய் சேகரிப்பை உறுதி செய்ய வேண்டும்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here