நெகிரி செம்பிலானில் நாளை முதல் உடல் ரீதியான இடைவெளி இன்றிய தொழுகைக்கு அனுமதி

கோப்புப் படம்

சிரம்பான், ஜூன் 12 :

நெகிரி செம்பிலானில் நாளை முதல் மசூதிகள் மற்றும் சூராக்களில் உடல் ரீதியான இடைவெளி இல்லாமல் கூட்டுப் பிரார்த்தனை செய்ய அனுமதிக்கப்படுகிறது.

தொழுகையாளர்கள் இனி தங்கள் சொந்த பிரார்த்தனைக்காக தொழுகைப் பாயை கொண்டு வரத் தேவையில்லை என்றும், தக்மீர் வகுப்புகள், விரிவுரைகள், தஸ்கிரா மற்றும் பேச்சுக்கள் போன்ற செயல்களும் உடல் இடைவெளியின்றி அனுமதிக்கப்படும் என்றும் அம்மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹருன் தெரிவித்துள்ளார்.

“இருப்பினும், தொழுகையாளர்கள் மசூதி மற்றும் சூராவின் மூடிய இடத்தில் இருக்கும் வரை முகக்கவசத்தை சரியாக அணிய வேண்டும்” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு பேஸ்புக் பதிவில் கூறினார்.

இதற்கிடையில், மாநிலம் முழுவதும் உள்ள மசூதிகள் மற்றும் சூராக்களில் இந்த ஆண்டு ஹஜ்ஜுப் பெருநாள் பலியிடும் சடங்கு செய்யவும் அனுமதிக்கப்படும் என்று அமினுடின் கூறினார்.

விண்ணப்பதாரர்கள் http://equrbans.jheains.my என்ற e-qurb@NS அமைப்பின் மூலம் நாளை பிற்பகல் 2 மணி முதல் ஜூலை 3 ஆம் தேதி மாலை 4 மணி வரை இதற்காக விண்ணப்பிக்க வேண்டும், என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here