சிரம்பான், ஜூன் 14 :
செக்கோலா மெனெங்கா அகமா பெர்செகுத்துவான் (SMAP) லாபு, நீலாய் என்ற இடத்திலுள்ள மாணவர் விடுதியில், இன்று அதிகாலை அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த போது, துணிகளை இஸ்திரி போடும் அறையில் தீப்பிடித்ததால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
மூத்த தீயணைப்பு அதிகாரி II, ஹர்சிசி ஹாஷிம் கூறுகையில், இச்சம்பவம் தொடர்பான அவசர அழைப்பைப் பெற்ற பிறகு, சிரம்பான் 2 தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு வாகனங்கள் அதிகாலை 2.16 மணிக்கு சம்பவ இடத்திற்குச் சென்றன.
சம்பவ இடத்திற்கு வந்தவுடன், பள்ளியின் ஆண்கள் விடுதியில், மாணவர்கள் துணிகளை இஸ்திரி செய்யும் “10 × 10 சதுர அடி அளவு கொண்ட அறையின் ஒரு பகுதியில் தீப்பிடித்தது கண்டுபிடிக்கப்பட்டது.
“சம்பவத்தின் போது, விடுதியில் ஆண் மாணவர்கள் இருந்தனர், ஆனால் அதிஷ்டவசமாக உயிர்சேதமோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை ” என்று அவர் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.