நவம்பர் 14-ல் மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தல்- தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

கோலாலம்பூர்:

மலாக்கா மாநிலத்தின் 16-ஆவது சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் நவம்பர் 14-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் (SPR) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் வரும் அக்டோபர் 31 ஆம் தேதியும், முன்கூட்டிய வாக்குப்பதிவு நவம்பர் 10, மற்றும் பொது வாக்குப்பதிவு நவம்பர் 14 (சனிக்கிழமை) ஆம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையத் தலைவர் டத்தோ ரம்லான் ஹாருன் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here