கோத்தா பாரு, ஜூன் 14:
இந்த ஆண்டு கிளாந்தானில் டிங்கி காய்ச்சல் பரவிய 23 ஆவது வாரம் வரை (ஜூன் 5 முதல் 11 வரை) மொத்தம் இரண்டு இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கிளாந்தான் மாநில சுகாதாரத் துறை இயக்குநர் டத்தோ டாக்டர் ஜைனி ஹுசின் கூறுகையில், கடந்த ஆண்டு டிங்கியால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றார்.
இந்த ஆண்டு ஜூன் 11 ஆம் தேதி வரை, கிளாந்தானில் டிங்கி காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 197 ஆக பதிவு செய்துள்ளன, இது கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் 101 வழக்குகளாக பதிவாகி இருந்தது. அதனுடன் ஒப்பிடும்போது, இந்தாண்டு 96 வழக்குகள் அல்லது 95.05 விழுக்காடு அதிகரிப்பை காட்டுகிறது.
“தற்போது, கோத்தா பாருவில் உள்ள பாடாங், கோத்தா மற்றும் பாஞ்சி மற்றும் கேத்தெரேவில் உள்ள தாமான் ஸ்ரீ மாஹாங் மற்றும் புக்கிட் சைனா 2 ஆகிய இடங்களில், கிளாந்தான் முழுவதும் மோதகம் ஐந்து டிங்கி கொத்தணிகள் உள்ளன,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இதுவரை 94,867 வளாகங்கள் மற்றும் குடியிருப்பு வீடுகள் என்பவற்றை ஆய்வு செய்யததில், 2,967 வளாகங்களில் லார்வாக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக டாக்டர் ஜைனி கூறினார்.
இது சம்பந்தமாக, நோய் பரப்பும் பூச்சிகளை அழிக்கும் சட்டம் (APSPP) 1975 இன் படி, RM230,500 மதிப்பிலான 461 அபராதங்களை அவரது துறை வித்தது என்றார்.
“ஒருவரின் வீட்டில் டிங்கி காய்ச்சல் தொற்றும் அபாயம் இருந்தால், அதாவது ஆய்வின் முடிவுகளில் ஏடிஸ் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்வது கண்டறியப்பட்டால், அதிகபட்சமாக RM500 அபராதம் வழங்கப்படும்,” என்றும் அவர் கூறினார்.









