குவாந்தான், ஜூன் 15 :
தானா பூத்தேயில் உள்ள பாலத்தில் இருந்து, குவாந்தான் ஆற்றின் நேற்று குதித்ததாகக் கூறப்பட்ட ஆணின் சடலம் இன்று ஆற்றில் மிதக்க கண்டெடுக்கப்பட்டது.
தானா பூத்தே பிராந்திய காவல்துறை தலைவர், துணை ஆணையர் வான் முகமட் ஜஹாரி வான் புசு கூறுகையில், பாலத்தைச் சுற்றியுள்ள பகுதியில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட மீட்புக் குழுவினரால், இன்று காலை 10.15 மணியளவில் உயிரிழந்தவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறினார்.
மெக்கானிக்காக பணிபுரிந்த 37 வயதான பாதிக்கப்பட்டவர், தற்கொலை செய்து கொண்டதாக நம்பப்படுகிறது என்றார்.
“இரண்டாம் நாள் தேடுதலின் போது, அவர் குதித்ததாக அறிவிக்கப்பட்ட இடத்திலிருந்து, சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில் மீட்புக் குழுவினர் பாதிக்கப்பட்டவரின் சடலத்தைக் கண்டுபிடித்தனர்.
நேற்றைய சம்பவத்தில், குடும்ப அங்கத்தவரால் காணாமல் போனதாகக் கூறப்பட்ட அந்த ஆடவர், ஆற்றில் குதித்த இடத்தில் அவரது கார் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பாலத்தில் இருந்து குதித்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
“பாதிக்கப்பட்டவர் அவர் நடத்தும் கார் பட்டறை தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடந்த இரண்டு மாதங்களாக மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது ” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.








