அனைத்து RapidKL பொது போக்குவரத்து சேவைகளும் இன்று தொடங்கி ஒரு மாதத்திற்கு இலவசம்

RapidKL இன் கீழ் இயங்கும் அனைத்து பொது போக்குவரத்து சேவைகளும் இன்று முதல் ஒரு மாதத்திற்கு இலவச சேவை வழங்கப்படும். இன்று எம்ஆர்டி புத்ராஜெயா லைன் 1  கட்டடத்தை அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கும் நிகழ்ச்சியுடன் இது இணைந்ததாக பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் அறிவித்தார்.

அதாவது MRT, LRT, Bus Rapid Transit (BRT), monorail அல்லது RapidKL பேருந்து சேவைகளை எடுக்கும் பயணிகள் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை. மலேசியர்கள் இந்த பொது போக்குவரத்து சேவைகளை முயற்சிக்கவும், தங்கள் வாகனங்களை Park n Ride வசதிகளில் நிறுத்தவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்துவார்கள் என்று நான் நம்புகிறேன் என்று அவர் கூறினார்.

இரண்டு கட்டங்களாக உருவாக்கப்பட்டு வரும் MRT புத்ராஜெயா லைன்,  டாமன்சாராவிலிருந்து புத்ராஜெயா வரை சுமார் இரண்டு மில்லியன் குடியிருப்பாளர்களுக்களுக்கான சேவையை வழங்கும் என்று இஸ்மாயில் கூறினார்.

கோலாலம்பூர் நகர மையத்தில் உள்ள தித்திவாங்சா,  கோலாலம்பூர் மருத்துவமனை, அம்பாங் பார்க் மற்றும் துன் ரசாக் எக்ஸ்சேஞ்ச் (TRX) போன்ற “தடங்கள்” வழியாக எம்ஆர்டி 2 வரிசையின் 2வது கட்டம் செல்லும்.

ஒன்பது நிலத்தடி நிலையங்கள் உட்பட 36 நிலையங்களுடன், MRT கார்ப் பொதுப் போக்குவரத்திற்கான அணுகலை மேம்படுத்த எதிர்காலத்தில் மேலும் நான்கு நிலையங்களைச் சேர்க்க திட்டமிட்டுள்ளதாக இஸ்மாயில் கூறினார். எம்ஆர்டி புத்ராஜெயா லைன் முழுவதுமாக திறக்கப்பட்டால், ஒரு நாளைக்கு 104,000க்கும் அதிகமானோர் பயன்படுத்துவர்  என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் KL நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறையும் என நம்பப்படுகிறது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here