ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்ற ஐவர் கைது

கோலாலம்பூர், ஜூன் 16 :

நேற்றிரவு கோலாலம்பூர்-சிரம்பான் நெடுஞ்சாலையில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் ஓட்டியும் பந்தயத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஐவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

புக்கிட் அமான் JSPT துணை இயக்குநர் டத்தோ முகமட் நட்ஸ்ரி ஹுசைன் கூறுகையில், புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு பிரிவு மற்றும் அமலாக்கத் துறையின் (JSPT) செயல்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்ட தெருக் கும்பல்களுக்கான சிறப்பு நடவடிக்கை, இரவு 10.30 மணிக்கு தொடங்கி, நெடுஞ்சாலையின் 273 ஆவது கிலோமீட்டரில்ஆபத்தான செயலில் ஈடுபட்ட 21 முதல் 25 வயதுடைய ஐந்து பேர் கைது செய்யப்பட்டதாக கூறினார்.

“அதிகாலை 1.20 மணியளவில், ஐந்து பேரும் பண்டார் துன் ரசாக், செராஸ் மற்றும் உலு லங்காட்டைச் சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் பாதுகாப்பாக மோட்டார் சைக்கிளை நிறுத்திய பின்னர் கைதுசெய்யப்பட்டனர்,” என்று அவர் இன்று வெளியிட்டஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்ட அனைவரும் மேல் நடவடிக்கைக்காக நீலாய் மாவட்ட காவல்துறை தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக முகமட் நட்ஸ்ரி கூறினார்.

மேலும் இந்த நடவடிக்கையில், பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக மொத்தம் 10 சம்மன்கள் வழங்கப்பட்டதாகவும், சாலை போக்குவரத்து சட்டம் 1987ன் பிரிவு 42ன் படி வழக்குகள் விசாரிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here