டீ குடிப்பதை குறைங்க! பொருளாதார நெருக்கடியால் மக்களிடம் வேண்டுகோள் விடுத்த பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: ‛‛நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலவுவதால் டீ குறைப்பதை குறைக்க வேண்டும்” என பாகிஸ்தான் நாட்டின் அமைச்சர் அசன் இக்பால் கூறினார். நமது நாட்டின் அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு உள்ளது.

இதனால் நாட்டு மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் சிரமம் உள்ளது. இலங்கைக்கு இந்தியா தொடர்ந்நு உதவி செய்து வருகிறது. இந்நிலையில் தான் இலங்கையை தொடர்ந்து இன்னொரு அண்டை நாடான பாகிஸ்தானும் கடும் பொருளாதார நெருக்கடியில் எதிர்கொள்கிறது. இந்த நாட்டில் பணவீக்கம் அதிகரிப்பதுடன், அந்நிய செலாவணி கையிருப்பு கரைந்து வருகிறது.

பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி இதனால் பாகிஸ்தானும் பொருளாதார நெருக்கடியில் நிலையில் தான் உள்ளது. இதனால் நாட்டில் உள்ள பொருட்களின் விலைகள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. நிதி நிலைமை மோசமானதால் நிலைமையை சரிசெய்ய பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிப்பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டன. இதனால் பெட்ரோல், டீசல் விலை ரூ.200யை தாண்டியுள்ளன. மேலும், பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் கிடுகிடுவென உயர்ந்து வருகின்றன.

அந்நிய செலாவணி குறைவு இதற்கிடையே தான் நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்துள்ளது. பிப்ரவரியில் பாகிஸ்தானின் அந்நிய செலாவணி கையிருப்பு சுமார் 16 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவில் இருந்தது. இது ஜூன் முதல் வாரத்தில் 10 பில்லியன் அமெரிக்க டாலராக குறைந்துள்ளது. அதாவது இரண்டு மாதத்துக்கு தேவையான பொருட்களின் இறக்குமதிக்கு மட்டுமே அந்நிய செலாவணி உள்ளது. இதனால் பாகிஸ்தான் பிற நாடுகளில் இருந்து பொருட்கள் இறக்குமதி செய்வதில் பிரச்சனையை சந்திக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் தான் பாகிஸ்தானில் உள்ள மக்கள், நாட்டின் பொருளாதாரத்தை நிலைநிறுத்த, அவர்கள் குடிக்கும் டீயின் அளவை குறைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

உலகில் மிகப்பெரிய தேயிலை இறக்குமதியாளராக பாகிஸ்தான் உள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 600 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான தேயிலையை பாகிஸ்தான் இறக்குமதி செய்திருந்தது. இந்நிலையில் தான் தற்போது டீ குடிப்பதை குறைக்க வேண்டும் என அந்த நாட்டின் அமைச்சர் கூறியுள்ளார். அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்து வரும் நிலையில் நாட்டின் இறக்குமதி பொருட்களின் செலவுகளை குறைக்கவும், நாட்டின் நிதி நிலைமையை இயல்பாய் வைத்து கொள்ளவும் அமைச்சர் இவ்வாறு அறிவுறுத்தி உள்ளார்.

நெட்டிசன்கள் கேள்வி; அரசுக்கு சவால் இருப்பினும் இந்த அறிவுரையை நெட்டிசன்கள் விமர்சனம் செய்கின்றனர். மேலும் சிலர் டீ குடிப்பதை குறைப்பதன் மூலம் நாட்டின் நிதிநிலை தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியுமா? என பலர் சந்தேக கேள்வி எழுப்பி உள்ளனர். பாகிஸ்தானில் சமீபத்தில் ஆட்சி மாற்றம் நடந்தது. ஏப்ரல் மாதம் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோல்வியடைந்து பதவியை இழந்த நிலையில் எதிர்க்கட்சிகளை இணைத்து ஷேபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக பொறுப்பேற்றார். இவர் பொறுப்பேற்ற அடுத்த 2 மாதங்களிலேயே நாட்டில் பொருளாதார நெருக்கடி அதிகரிக்க துவங்கி உள்ளது. இது ஷேபாஸ் ஷெரீப் அரசுக்கு பெரும் சவாலாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here