கால்நடைகள் மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து ; ஐவர் காயமின்றி உயிர் தப்பினர்

கோத்தா பெலூட், ஜூன் 17 :

இன்று காலை இங்குள்ள ஜாலான் கோத்தா பெலூட் – கோத்தா மருது என்ற இடத்தில், அவர்கள் பயணித்த ஆம்புலன்ஸ் மாட்டு மந்தையின் மீது மோதியதில் ஐந்து நபர்கள் பாதுகாப்பாக உயிர் தப்பினர்.

அதிகாலை 4 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் மருத்துவர், செவிலியர், ஓட்டுநர், நோயாளி மற்றும் நோயாளியின் குடும்பத்தினர் என சம்பந்தப்பட்ட அனைவரும் உயிர் தப்பினர்.

ஆனால், இந்த மோதல் காரணமாக நான்கு மாடுகள் இறந்தன.

கோத்தா பெலூட் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் ஷாருதீன் மாட் ஹுசைன் கூறுகையில், குடாட் மருத்துவமனைக்குச் சொந்தமான ஆம்புலன்ஸ், கோத்தா கினாபாலுவில் உள்ள மருத்துவமனைக்கு நோயாளிகளைக் கொண்டு வருவதற்கான உத்தியோகபூர்வ பணியில் இருந்தது விசாரணையில் கண்டறியப்பட்டது.

“அவர்கள் அந்த இடத்திற்கு வந்தவுடன், திடீரென்று ஒரு கால்நடைக் கூட்டம் சாலையின் வலமிருந்து இடப்புறமாக கடந்து சென்றது.

“அவை மிக அருகில் குறுக்கிட்டதால், ஆம்புலன்ஸ் ஓட்டுநரால் மாட்டை அடிக்காது தப்பிக்க முடியவில்லை ” என்று அவர் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.

அவரது கூற்றுப்படி, இந்த சம்பவத்தின் விளைவாக, நான்கு பசுக்கள் இறந்தன, இதுவரை யாரும் அந்த பசுக்களுக்கு உரிமை கோரவில்லை.

சாலைப் போக்குவரத்து விதிகள் 1959 (விதி 10 LN 166/59) விதி 10ன் படி இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது என்றார்.

மேலும், இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க, வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்கவும், போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்கவும் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்,” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here