இந்தோனேசியாவுக்கான தூதுவராக தாஜுதீன் நியமிக்கப்பட்டது உறுதி

கோலாலம்பூர், ஜூன் 19 :

இந்தோனேசியாவுக்கான மலேசியத் தூதுவராக நியமனம் செய்வதற்கான கடிதத்தைப் பெற, இஸ்தானா நெகாராவுக்கு தான் அழைக்கப்பட்டதை அம்னோ உச்ச மன்ற உறுப்பினரான தாஜுடின் அப்துல் ரஹ்மான் உறுதிப்படுத்தியுள்ளார்.

“ஆம், என்னால் அதை உறுதிப்படுத்த முடியும். யாங் டி-பெர்டுவான் அகோங்கின் அழைப்பை நான் ஏற்றுக்கொண்டு, நாளை தூதுவராக நியமனம் செய்வதற்கான கடிதத்தை நான் பெறவுள்ளேன், ”என்று தாஜுடின் கூறினார்.

மார்ச் 21, 2019 அன்று நியமிக்கப்பட்ட ஜைனல் அபிதீன் பாக்கர் ஏப்ரல் 4, 2021 அன்று ஓய்வு பெற்றதிலிருந்து, இந்தோனேசியாவுக்கான தூதர் பதவி காலியாகவே உள்ளது.

தாஜுதீனின் இந்த நியமனம் எம்.பி.க்கள், முன்னாள் இராஜதந்திரிகள், அரசியல்வாதிகள் மற்றும் சிவில் சமூகம் உட்பட பல தரப்பிலிருந்தும் பல விமர்சனங்களை முன்னர் பெற்றிருந்தது நினைவுகூறத்தக்கது.

தாஜுதீனின் நியமனம் இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தாஜுதீன் இதற்கு முன்னர், கடந்த நவம்பரில் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்திற்காக இந்தோனேசியாவிற்கு சென்றிருந்த பிரதமருடன் சென்றிருந்தார், அதுவே அவர் இந்தோனேசியாவுக்கான மலேசிய தூதராக நியமிக்கப்படுவார் என்ற ஊகங்களுக்கு வழிவகுத்தது.

மே 2021 இல், இரண்டு எல்ஆர்டி ரயில்கள் மோதியது தொடர்பாக அவர் மிகவும் விமர்சிக்கப்பட்ட செய்தியாளர் சந்திப்பிற்கு சில நாட்களுக்குப் பிறகு, பாசீர் சாலாக் எம்பியுமான தாஜுதீன், பிரசரணாவின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here