மீன்பிடிக்கும்போது படகில் இருந்து தவறி, கடலில் விழுந்த ராஜேந்திரன் சடலமாக மீட்கப்பட்டார்

ஜார்ஜ் டவுன், ஜூன் 20 :

மீன்பிடிக்கச் சென்றபோது படகில் இருந்து தவறி விழுந்த மீனவர் ஒருவர், நேற்று ஜெரேஜாக் தீவின் கடலில் மூழ்கி உயிரிழந்தார்.

மலேசிய கடல்சார் அமலாக்க படையின் மாநில இயக்குநர், கடல்சார் கேப்டன் அப்துல் ரசாக் முகமட் கூறுகையில், நேற்று மாலை 3.15 மணியளவில் ராஜேந்திரன் (56) என அழைக்கப்படும் உயிரிழந்தவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

நண்பருடன் மீன்பிடிக்கும்போது, அவர் தவறி கடலில் வீழ்ந்து நீரில் மூழ்கியதாக சந்தேகிக்கப்படும் சம்பவம் தொடர்பாக, லங்காவியிலுள்ள கடல்சார் மீட்பு துணை மையத்திலிருந்து MERS 999 மூலம் அவரது துறைக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாக அவர் கூறினார்.

“அவர்களுக்கு அறிக்கை கிடைத்தவுடன், KILAT-26 படகு சம்பவ இடத்திற்குச் சென்று தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்தபோது, பாதிக்கப்படடவர் தனது நண்பருடன் சவாரி செய்து கொண்டிருந்த படகின் அருகே, இறந்து கிடந்ததாக நம்பப்படும் உடலைக் கண்டனர், “என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

வலையில் ராஜேந்திரனின் கால்கள் சிக்கியதால், அவர் கடலில் விழுந்து உயிரிழந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவரின் நண்பரான முருகன் என்பவர் தெரிவித்தார்.

“KILAT-26 படகின் உறுப்பினர்கள், பத்து உபான் மரைன் போலீஸ் ஜெட்டிக்கு பலியானவரின் உடலை எடுத்துச் சென்று, பிறை மாவட்ட போலீசாரிடம் ஒப்படைத்தனர், பின்னர் ஆம்புலன்ஸ் மூலமாக செபெராங் ஜெயா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. ”என்று அவர் கூறினார்.

கடலில் இருக்கும்போதும் எந்தவொரு செயலையும் செய்யும்போது எப்போதும் கவனமாக இருக்கவும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கவும் மலேசிய கடல்சர் அமலாக்க படை பொதுமக்களை அறிவுறுத்துகிறது, என்றும் அவர் கூறினார்.

“கடலில் ஏதேனும் கண்டுபிடிப்புகள் மற்றும் அவசரநிலைகள் அல்லது விபத்துகள் ஏற்பட்டால் 24 மணிநேர MERS 999 அவசரநிலைக்கோ அல்லது பினாங்கு கடல்சார் செயல்பாட்டு மையத்தில் 04-2626146 என்ற எண்ணிலோ தெரிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here