ஈப்போ, ஜூன் 22 :
ஸ்ரீ இஸ்கந்தரிலுள்ள Tahfiz Dar al-Fawzan மையத்தின் மாணவர்கள் தங்குமிடத்திலுள்ள ஒரு அறையில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், ஆறு மாணவர்கள் உயிர் தப்பினர்.
பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், அதிகாலை 4.46 மணியளவில் சம்பவம் தொடர்பில் தங்களுக்கு அவசர அழைப்பு வந்தது என்றார்.
அதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு பத்து காஜா தீயணைப்பு மற்றும் மீட்பு துறை உறுப்பினர்களின் உதவியுடன் ஸ்ரீ இஸ்கந்தர் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் உறுப்பினர்களும் விரைந்தனர்.
“15 × 10 சதுர அடி பரப்பளவைக் கொண்ட மேல் தளத்தில் உள்ள ஒரு அறையில் தீ விபத்து ஏற்பட்டிருந்ததைக் கண்டனர், அது சுமார் 15 விழுக்காடு சேதமடைந்திருந்தது
என்றும் அவர் கூறினார்.
“சம்பவத்தின் போது விடுதியில் வசித்த மொத்தம் 6 மாணவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் மேலும் அதிகாலை 5.20 மணியளவில் மீட்பு நடவடிக்கை முழுமையாக முடிவடைந்ததாகவும்” அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.