அனுமதிக்கப்படாத தகவல் தொடர்பு சாதனங்களை விற்றதற்காக ஒரு நிறுவனத்திற்கும் அதன் இயக்குநருக்கும் தலா RM8,000 அபராதம் விதிப்பு

தாவாவ், ஜூன் 23 :

மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தினால் (MCMC) சான்றளிக்கபடாத தகவல் தொடர்பு சாதனங்களை விற்றதற்காக, ஒரு நிறுவனத்திற்கும் அதன் இயக்குநருக்கும் தலா RM8,000 அபராதம் , அபராதம் செலுத்த தவறினால் இரண்டு மாத சிறைத்தண்டனை என்பவற்றை அமர்வு நீதிமன்றம் இன்று விதித்தது.

நீதிபதி அவாங் கெரிஸ்னாடா அவாங் மஹ்மூட் முன்னிலையில், Best Secure & Automation Sdn Bhd நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர் லியாவ் கிங் சோய், 46, எதிரான குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட பிறகு, அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதால் நீதிபதி அபராதம் விதித்தார்.

லியாவ் அபராதம் செலுத்தினார்.

கடந்த ஜூன் 10, 2020 அன்று, லாட் 24, பிளாக் ஜி, தரைத் தளம், குபோடா சதுக்கம், ஜாலான் குபோடா, என்ற இடத்தில் காலை 11.30 மணிக்கு தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா (Technical Standard) ஒழுங்கு விதிமுறைகள் 2000 மூலம் சான்றளிக்கப்படாத, Kenwood 520D walkie-talkies இரண்டு யூனிட்களை விற்பனை செய்ததாக லியாவ்வின் நிறுவனம் மற்றும் லியாவ் மீது குற்றம் சாட்டப்பட்டது.

தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா (Technical Standard) ஒழுங்குமுறைகள் 2000 இன் விதிமுறை 16 (1)(b) மற்றும் 16(3) ஆகியவற்றின் கீழ் குற்றச்சாட்டுகள் உருவாக்கப்பட்டன, மேலும் அதே சட்டத்தின் 37வது விதியின் கீழ் இது தண்டனைக்குரியது, இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக RM100,000 அபராதம் அல்லது ஆறு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்க வழிசெய்யும்.

வழக்கின் உண்மைகளின்படி, ஒரு நபர் நிறுவனத்திடமிருந்து RM680 க்கு இரண்டு வாக்கி-டாக்கிகளை வாங்கினார், மேலும் ரேடியோ அலைவரிசை சோதனைகள், மின்காந்த இணக்கத்தன்மை (EMC) மற்றும் பாதுகாப்பு சோதனைகளுக்காக தகவல் தொடர்பு சாதனங்கள் SIRIM க்கு அனுப்பப்பட்டன, ஆனால் அவை அனைத்து சோதனைகளிலும் தோல்வியடைந்தன.

அதனைத் தொடர்ந்து, தகவல்தொடர்பு சாதனம் MCMC அல்லது வேறு பதிவுசெய்யப்பட்ட சான்றிதழ் முகவர் நிறுவனங்களாலோ சான்றளிக்கப்படவில்லை என்பதையும் SIRIM கண்டறிந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here