67 வயது மூதாட்டி ஓட்டி சென்ற கார் மோதி 26 வயது நபர் பலி

கோலா சிலாங்கூரில் கிலோமீட்டர் 50, ஜாலான் கிள்ளான்-தெலுக் இந்தான் என்ற இடத்தில், மூதாட்டி ஓட்டி சென்ற காரி விபத்தில் சிக்கிய ஓ ஒருவர் உயிரிழந்தார்.

மூதாட்டிக்கு உடல்நலக் கோளாறு இருப்பது உறுதி செய்யப்பட்டது. கோலா சிலாங்கூர் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் ராம்லி காசா கூறுகையில், புரோட்டான் சாகா ஓட்டிச் சென்ற 67 வயதுப் பெண்ணுக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் இருந்தது விசாரணையில் கண்டறியப்பட்டது.மநஅந்தப் பெண்ணுக்கும் சிறுநீரகக் கோளாறு இருக்கிறது என்று இன்று தொடர்பு கொண்டபோது சுருக்கமாகச் சொன்னார்.

காலை 9.50 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில் 26 வயதுடைய நபர், புரோட்டான் சாகா கூரையின் மேல் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதே சமயம் வயதான டிரைவர் காரை நிறுத்தாமல் 400 மீட்டர் தூரம் தனது பயணத்தை தொடர்ந்தார்.

இருப்பினும், இடுப்பில் லேசான காயம் அடைந்த அவர் சம்பவ இடத்தில் இதர வானகமோட்டிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here