பாஸ் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி, பாசீர் சாலாக் தொகுதியில் தாஜுடின் போட்டியிடலாம் என்கிறார் பேராக் மாநில பாஸ் கட்சி ஒருங்கிணைப்பாளர்

பாகன் செராய், ஜூன் 25 :

15 ஆவது பொதுத் தேர்தலில் (GE15) பாசீர் சாலாக் நாடாளுமன்ற தொகுதியை டத்தோஸ்ரீ தாஜுடின் அப்துல் ரஹ்மான் தக்க வைத்துக்கொள்ள, பாஸ் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி அவர் போட்டியிடலாம் என பேராக் பாஸ் கட்சி ஒருங்கிணைப்பாளர் ரஸ்மான் ஜகாரியா தெரிவித்துள்ளார்.

அம்னோ உச்ச மன்ற செயற்குழுவில் (MKT) இருந்து தாஜுதீன் நீக்கப்பட்டதை அடுத்து, இந்த சலுகையை அவருக்கு தாம் அளிக்கப் தயாராக உள்ளதாக அவர் கூறினார்.

“தற்போது அவர் அம்னோ உச்ச மன்றத்திலிருந்து நீக்கப்பட்டடுள்ள ​​நிலையில், தாஜுடினுக்கு GE15ல் போட்டியிட பாரிசான் நேசனலில் (BN) வாய்ப்பு வழங்கவில்லை என்றால், பாஸை பிரதிநிதித்துவப்படுத்தி அவர் பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியின் (PN) கீழ், பாசீர் சாலாக்கில் போட்டியிடும் வாய்ப்பினை வழங்க பேராக் பாஸ் தயாராக உள்ளது என்றார்.

மேலும் பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியின் கீழ், பாசீர் சாலாக் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை அது பாஸுக்கு வழங்கினால் மற்றும் தாஜுடின் PN கூட்டணியில் போட்டியிடத் தயாராக இருந்தால், நாங்கள் அவருக்கு அந்த வாய்ப்பை வழங்குவோம்,” என்று அவர் இன்று கூறினார்.

முன்னதாக, அம்னோ பொதுச்செயலாளர் டத்தோஸ்ரீ அகமட் மஸ்லான், அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி ஆகியோர் தாஜுடினை அம்னோ உச்ச மன்ற செயற்குழுவில் இருந்து பதவி நீக்குவதாக அறிவித்திருந்தனர். எவ்வாறாயினும், தாஜுடின் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணத்தை அஹ்மட் அந்த பதவி நீக்கக் கடிதத்தில் தெரிவிக்கவில்லை.

மேலும் கட்சியை வெளிப்படையாக விமர்சித்ததன் காரணமாக தாஜுடின் நீக்கப்பட்டதாக அஹ்மட் ஜாஹிட் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here