பெக்கான், ஜூன் 27 :
ஜாலான் சிகாமாட்-குவாந்தானில், நேற்று பிற்பகல் இரண்டு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார், ஏனைய நால்வர் லேசான காயமடைந்தனர்.
உயிரிழந்தவர் இங்குள்ள தாமான் பெர்ஜாயா பெர்மையைச் சேர்ந்த அஸ்லினா முகமட், 51, என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் பகாங் மாநில மக்கள் தொடர்பு அதிகாரி, சுல்ஃபாட்லி ஜகாரியா கூறுகையில், பாதிக்கப்பட்ட மற்றய நான்கு பேருக்கு லேசான காயம் மட்டுமே ஏற்பட்டது.
இந்த விபத்து குறித்து இன்று பிற்பகல் 3.47 மணியளவில் தீயணைப்புப் படையினருக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, சம்பவம் நடந்த இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், பெரோடுவா மைவி கார் மற்றொரு மஸ்டா கார் மீது மோதியதாக நடவடிக்கைத் தளபதி தெரிவித்தார்.
“பெறப்பட்ட ஆரம்ப அறிக்கைகளின் அடிப்படையில், பெரோடுவா மைவியில் இருந்த ஒருவர் பலத்த காயங்கள் காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
“பெக்கான் தீயணைப்பு நிலையத்தில் இருந்து 15 தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புப் பணியாளர்களின் வேகமான செயல்பாட்டின் மூலம், பாதிக்கப்பட்ட அனைவரையும் வெற்றிகரமாக மீட்க முடிந்தது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இதற்கிடையில், காயமடைந்த பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவ அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டதாக சுல்ஃபாட்லி கூறினார்.
மேலும் உயிரிழந்த நபரின் சடலம் மேலதிக நடவடிக்கைகளுக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.









