சிக் மாவட்டத்தின் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின; 94 வீடுகள் பாதிப்பு

சிக், ஜூன் 28 :

இன்று அதிகாலை 1 மணி முதல் பெய்துவரும் கனமழையைத் தொடர்ந்து, முக்கிம் சிக்கில் உள்ள மூன்று கிராமங்களிலும், முக்கிம் சோக்கில் உள்ள ஆறு கிராமங்களிலுமாக மொத்தம் 94 வீடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், மலேசிய குடிமைத் தற்காப்பு அதிகாரி, லெப்டினன்ட் (PA) ஹைசூல் ஆய்ஷா முகமட் நபியாவின் கூற்றுப்படி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தஞ்சம் புகுந்ததால், அங்கு வெள்ள நிவாரண மையங்கள் எதுவும் திறக்கப்படவில்லை என்று கூறினார்.

நள்ளிரவு 1.20 மணியளவில் தண்ணீர் பெருகி கிராம மக்களின் வீடுகளுக்குள் புகுந்ததாக ஹைசுல் ஆயிஷா கூறினார். அத்தோடு தற்போது மழை நின்றுவிட்டது என்றும் சில பகுதிகளில் வெள்ள நீர் வடிந்துவிட்டது என்று ஹைசூல் ஆய்ஷா கூறினார்.

இதற்கிடையில், கெடா ஏபிஎம் பேரிடர் நடவடிக்கை தலைவர் சைபுதீன் அப்துல்லா கூறுகையில், பேலிங் மற்றும் படாங் தேராப் மாவட்டங்களில் சில பகுதிகளிலும் வெள்ளம் ஏற்பட்டது என்றார்.

பெலிங்கில் இல் 42 வீடுகளும் படாங் தேராப்பில், 7 வீடுகழும் வெள்ளத்தால் திக்கப்பட்டுள்ளன, ஆனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்குவதற்கு இதுவரை எந்த வெள்ள நிவாரண மையம் திறக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here