டத்தாரான் சன்வேயில் உள்ள ஓர் கேளிக்கை மையத்தில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர்.
அந்த மையத்தில் மொத்தம் 58 பேர் இருந்துள்ளனர். 19 முதல் 61 வயதுற்குட்பட்ட 41 ஆண்களும் 17 பெண்களும் அங்கு ஒன்று கூடியிருந்துள்ளனர்.

அவர்களுள் 43 வயது நிரம்பிய ஆடவர் ஒருவரை போலீஸார் கைது செய்தனர். முறையான ஆவணம் இல்லாத அந்நிய பிரஜையை மையத்தில் வேலைக்கு அமர்த்திய குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டார். அதோடு ரொக்கப்பணமாக 3,550 வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டது.
சுற்றுலா விசா கொண்டிருக்கும் அந்நிய பிரஜைகள் 8 பேர் அந்த மையத்தில் வேலை செய்துள்ளனர். அவர்களையும் போலீஸார் கைது செய்தனர். குடிநுழைவுத் துறையினருடனான விசாரணைக்கு பிறகு அதில் மூவர் போலீஸாரின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

அதோடு நிபந்தனைகளுடனான நடமாட்டக் கட்டுப்பாட்டை மீறிய குற்றத்திற்காக 46 பேருக்கு தலா 1,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல் துறை தலைவர் ஏசிபி நிக் எஸானி பின் முகமட் ஃபைசல் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.





















