7 மற்றும் 5 வயது சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக மூதியவர் மீது குற்றச்சாட்டு

பட்டர்வொர்த், ஜூன் 29 :

ஜனவரி 2014 முதல் கடந்த ஆண்டு மார்ச் வரை 7 மற்றும் 5 வயதுடைய இரண்டு சகோதரிகளுக்கு எதிராக, பாலியல் பலாத்காரம் மற்றும் உடல் ரீதியான பாலியல் வன்கொடுமை செய்ததாக 17 குற்றச்சாட்டுகளின் கீழ், முதியவர் ஒருவர் இங்குள்ள இரண்டு அமர்வு நீதிமன்றங்களில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

நீதிபதிகள் நோரைனி யூசோஃப் மற்றும் நூர்ஹயாத்தி முகமட் யூனுஸ் ஆகியோர் முன்னிலையில் ஆஷாரி இப்ராஹிம், 74, என்ற முதியவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டபோது, அவர் தான் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினார்.

நீதிபதி நோரைனி முன் வாசிக்கப்பட்ட ஆறு குற்றச்சாட்டுகளின்படி, ஜனவரி 1, 2018 முதல் டிசம்பர் 31, 2020 வரை, ஏழு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, உடல் ரீதியாக பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இங்கு அருகில் உள்ள செபெராங் பிறை தெங்கா மாவட்டத்தில் பிறை என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில் இந்தக் குற்றம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

குற்றம் சாட்டப்பட்டவர், குற்றவியல் சட்டத்தின் பிரிவு 376 (1) (e) மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் 2017 இன் பிரிவு 14 (d) ஆகியவற்றின் கீழ் குற்றத்தைச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றம் சாட்டப்பட்டவருக்கு அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்கப்படலாம்.

இதற்கிடையில், நீதிபதி நோர்ஹயாத்தி முன் மற்றய 11 குற்றச்சாட்டுகளுக்கு, குற்றம் சாட்டப்பட்டவர் பாலியல் பலாத்காரம் மற்றும் மற்றொரு சிறுமியுடனும் உடலுறவு கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டார்.

குற்றச்சாட்டின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவர் முதல் குற்றச்சாட்டில் பாதிக்கப்பட்டவரின் சகோதரியான ஐந்து வயது குழந்தை மீதும் அதே இரண்டு செயல்களையும் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.

ஜனவரி 1, 2014 முதல் மார்ச் 2021 வரை இதே இடத்தில் குற்றம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

இக்குற்றத்திற்காக, குற்றம் சாட்டப்பட்டவர் மீது குற்றவியல் சட்டத்தின் பிரிவு 376 (1) (e) மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் 2017 இன் பிரிவு 14 (d) ஆகியவற்றின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த வழக்கை துணை அரசு வழக்கறிஞர்கள் முகமட் சைகல் சே முராத் மற்றும் ஐஸ்யா அல் ஹுமைரா கமாருஜாமான் ஆகியோர் கையாண்டனர், குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில் எந்த வழக்கறிஞரும் ஆஜராகவில்லை.

இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை, இரண்டு நீதிபதிகளும் வழக்கின் மறு தேதியாக ஜூலை 29 ஐ குறிப்பிட்டதுடன் குற்றஞ்சாட்டப்பட்டவர் தரப்பு ஒரு வழக்கறிஞரை நியமிக்கவும் அதே தேதியை நிர்ணயித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here