பெட்டாலிங் ஜெயா வட்டாரத்தில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட வந்த ஆடவர் கைது

பெட்டாலிங் ஜெயா வட்டாரத்தில் பல  திருட்டு சம்பவங்கள் தொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர்.

கடந்த வியாழன் (ஜூன் 23) காலை 8 மணியளவில் தனது அறை ஜன்னல் திறந்து கிடப்பதாக 35 வயது பெண் ஒருவர் புகார் அளித்ததையடுத்து போலீசார் உஷார்படுத்தப்பட்டதாக பெட்டாலிங் ஜெயா OCPD உதவி ஆணையர் முகமட் ஃபக்ருதீன் அப்துல் ஹமீட் தெரிவித்தார்.

இங்கே பிரிவு 14 இல் உள்ள தனது வீட்டைச் சோதனை செய்ததாகவும், வீட்டின் கேட் சேதமடைந்திருப்பதைக் கண்டறிந்ததாகவும் அவர் கூறினார். மேலும் சோதனைகளில் அவரது தனிப்பட்ட ஆவணங்கள், மொபைல் போன், சாவிகள், வங்கி ஆவணங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் காணாமல் போனது தெரியவந்தது என்று அவர் புதன்கிழமை (ஜூன் 29) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

தகவலின் அடிப்படையில், இங்குள்ள பிரிவு 4க்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொண்ட 32 வயதுடைய நபரை போலீஸார் கைது செய்ததாக அவர் கூறினார்.

சந்தேக நபரிடம் நடத்திய சோதனையில், காலணிகள், நகைப் பெட்டி, பணம், எலக்ட்ரானிக் கேஜெட்டுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் திருடப்பட்டது தெரியவந்தது.  மேலும் திருடப்பட்ட ஒரு மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டது என்று அவர் கூறினார்.

விசாரணையில், சந்தேக நபர் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டதாக ஏசிபி முகமது ஃபக்ருதீன் கூறினார்.

இரண்டு வீடு உடைப்பு, இரண்டு திருட்டு, மோட்டார் சைக்கிள் திருட்டு ஆகிய வழக்குகளை கைதின் அடிப்படையில் வெற்றிகரமாக தீர்த்துள்ளோம்.

சந்தேக நபர் குற்றம் மற்றும் போதைப்பொருள்  தொடர்பாக முன்னரே பதிவு இருப்பதும் சோதனையில் தெரியவந்துள்ளது என்று அவர் கூறினார். மேலும் விசாரணைகளுக்கு உதவும் வகையில் சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here