தன் தந்தையை அணைத்து அப்பா… எழுந்துருங்க… என்று கதறிய மீனாவின் மகள்

நடிகை மீனா

நடிகை மீனாவிற்கும், பெங்களூரூவை சேர்ந்த கணிணி பொறியாளர் வித்யாசாகருக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இத்தம்பதிகளுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார்.

வித்யாசாகர் மரணம்

நடிகை மீனா தற்போது கோட்டூர்புரம் பகுதியில் உள்ள ஸ்ரீநகர் காலனி அவென்யூவில் வசித்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன் மீனாவின் கணவர் வித்யாசகருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.

இதனையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட வித்யாசாகருக்கு நுரையீரல் பிரச்சினை ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்த வித்யாசகர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார்.

 

பிரபலங்கள் இரங்கல்

மீனாவின் கணவர் வித்யாசாகர் உயிரிழப்புச் செய்தியைக் கேட்டு அவரது ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திரைப்பிரபலங்கள் பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

நேரில் அஞ்சலி

மீனாவின் கணவர் வித்யாசாகர் உடலுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், சரத்குமார், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்.

அப்பா… எழுந்துருங்க…

வித்யாசாகரின் இறுதி ஊர்வலத்தில் தன் தந்தையை அணைத்து அப்பா… எழுந்துருங்க… என்று மீனா மகள் கதறிய காட்சி அங்கிருந்தவர்களின் கண்களை குளமாக்கியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here