மீன் பிடிக்கும்போது ஏரியில் தவறி விழுந்த ஆடவர், நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது

சிக், ஜூன் 30 :

இங்குள்ள குபீர் ஏரியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, ஏரியில் விழுந்த ஒருவர் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது, மற்றும் அவரது நண்பர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.

நீரில் மூழ்கி காணாமல் போனவர் உத்மான் அப்துல் கானி (49) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார், அவரது நண்பர் முகமட் கைருல் பத்ரி மஹ்யுதீன் (28) என்பவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.

கெடா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் துணை இயக்குநர் முகமதுல் எஹ்சான் முகமட் ஜைன் கூறுகையில், காலை 11.07 மணிக்கு இந்த சம்பவம் தொடர்பாக தமது துறைக்கு அழைப்பு வந்தது.

அவரது கூற்றுப்படி, உதவி தீயணைப்பு கண்காணிப்பாளர் முகமட் பௌசி ரசாலி தலைமையிலான சிக் மற்றும் சுங்கை பட்டாணி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களின் உறுப்பினர்கள் குழு தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பவ இடத்திற்கு விரைந்தது.

மேலும் சுங்கை பட்டாணி மற்றும் ஜித்ராவைச் சேர்ந்த நீர் மீட்புக் குழுவும் தேடுதல் நடவடிக்கைக்கு உதவுவதற்காக அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டது.

“இரண்டு பாதிக்கப்பட்டவர்கள் இருப்பதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது, அவர்களில் ஒருவர் பத்திரமாக இருக்கிறார் மற்றும் அவரே அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்,” என்று அவர் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.

அவர்கள் அப்பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுவதாக முகமதுல் எஹ்சான் தெரிவித்தார்.

அந்த இடத்தில் தொடர்பாடல் கவரேஜ் கிடைப்பதில் உள்ள சிரமம் காரணமாக, தமது துறையினர் சிரமங்களை எதிர்கொண்டதாக அவர் கூறினார்.

“ தீயணைப்புப் படையினர் மற்றும் பொதுமக்களின் மூன்று படகுகளின் உதவியுடன் நீர் மேற்பரப்பில் தேடுதல் பணிகள் இன்னமும் நடைபெற்று வருகின்றன” என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here