படகு கவிழ்ந்த விபத்தில், காணாமல் போனதாக தேடப்பட்ட தந்தை மற்றும் மகனின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன

காஜாங், ஜூலை 2 :

இங்குள்ள ஜாலான் கோலம் தாக்குங்கான், தாமான் சஹாயா சுங்கை சுவா என்ற இடத்தில், படகு கவிழ்ந்ததில் ஆற்றுக்குள் விழுந்த தந்தை மற்றும் மகனின் சடலங்கள் நீர் மீட்புக் குழுவினரால் இன்று பிற்பகல் கண்டெடுக்கப்பட்டது.

சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) இயக்குநர் நோரஸாம் காமிஸ் கூறுகையில், நீரில் மூழ்கியவர் முகமட் அட்னான் ஜோதி, 50, என்ற முதலாமவர் மாலை 5.12 மணிக்கு கண்டுபிடிக்கப்பட்டார், அவரது மகன் ஹக்கிமி முகமட் அட்னான், 15, மாலை 6.56 மணிக்கு கண்டுபிடிக்கப்பட்டார் என்றார்.

அவரது கூற்றுப்படி, பாதிக்கப்பட்டவரின் மற்றொரு மகன் , முகமட் முஸ்தகிம் முகமட் அட்னான், 17, சம்பவத்தின்போது அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இன்று, இங்குள்ள ஜாலான் கோலம் தாக்குங்கான் தாமான் சஹாயா சுங்கை சுவா என்ற இடத்தில் படகு கவிழ்ந்ததில், அவரது தந்தையும் தம்பியும் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக அஞ்சப்பட்ட நிலையில், பதின்ம வயது சிறுவன் ஒருவர் உயிர் பிழைத்ததாக ஊடகங்கள் முன்பு தெரிவித்திருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here