சட்ட மீறலில் ஒன்பது ஆண்கள் குடிபோதையில் உல்லாசமா!

கோத்தா கினபாலு, ஏப். 21-

மக்கள் நடமாட்ட கூடல் இடைவெளி கட்டுப்பாடு ஆணை நடப்பில் இருக்கும்போது ஒன்றாகக் குடித்துவிட்டு சாப்பிட்ட ஒன்பது ஆண்கள் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 19) கைது செய்யப்பட்டனர்.

கே.ஜி.பொம்பொங்கில் இரவு 7.10 மணிக்கு நடத்தப்பட்ட சோதனையின்போது இவர்கள் துவாரான் பகுதியில் ​கைது செய்யப்பட்டனர். விசாரித்ததில் தேவைப்படுபவர்களுக்கு உதவிப்பொருட்கள் விநியோகிப்பதற்கான வழிகள் குறித்துப் பேசுவதற்காக கூடியதா அவர்கள் தெரிவித்தாதாக துவாரன் ஓ.சி.பி.டி துணைத் தலைவர் மொஹமட் ஹமிஜி ஹலீம் தெரிவித்தார்.

40 முதல் 60 வயதுடைய இவர்கள் இழுத்துச் செல்லப்பட்டனர், மேலும் தொற்று நோய்கள் தடுப்பு, கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவார்கள் என்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21) அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

ஆரம்ப விசாரணையில் சந்தேக நபரின் வீட்டில் ஒன்றுகூடியது கண்டறியப்பட்டது, அவர் தனது விருந்தினர்களுக்கு உணவு. பானங்கள் தயார் செய்திருந்தார்.

மற்றொரு விஷயத்தில், மார்ச் 18 முதல் ஏப்ரல் 20 வரை மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு கூடல் இடைவெளி ஆணையை மீறியதற்காக, மாவட்டத்தில் ஒரு பெண் உட்பட மொத்தம் 31 பேரை மாவட்ட போலீசார் கைது செய்துள்ளனர் என்றார் அவர்.

மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்குக் கட்டுப்படுவதை உறுதி செய்வதற்காக போலீசார் தொடர்ந்து தங்கள் நடவடிக்கைகளையும் சோதனைகளையும் மேற்கொள்வார்கள் என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here