ஜோகூர் பாரு, கம்போங் பாகார் பத்துவில் உள்ள ஒரு வீட்டில், தனது மனைவி மற்றும் அவர்களது மூன்று மாதக் குழந்தையைக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் கப்பல் கிளீனர் ஒருவர், இன்று முதல் ஏழு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குற்றவியல் சட்டம் பிரிவு 302 இன் கீழ் விசாரணையை எளிதாக்கும் வகையில், 24 வயதான சந்தேக நபருக்கு எதிரான விளக்கமறியலில் ஆணை பிறப்பிக்கப்பட்டது.
நேற்று, இங்குள்ள பெர்மாஸ் ஜெயாவில், கம்போங் பாகார் பத்துவில் உள்ள அவர்களது வீட்டின் முன் கதவுக்கு அருகே, பெண்ணும் குழந்தையும் ரத்த வெள்ளத்தில் கிடந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, அந்த நபரை போலீசார் கைது செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது. ஆடையின்றி மோட்டார் சைக்கிளில் பயணித்த போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.