அம்னோவின் கட்சி அரசியலமைப்பை திருத்துவதற்கான விண்ணப்பம் ஜூலை 16 ஆம் தேதிக்குள் முடிவு செய்யப்படும் என்று சங்கங்களின் பதிவிலாகா (RoS) தெரிவித்தாக பெர்னாமா செய்தி வெளியிடப்பட்டது.
இந்தத் திருத்தத்தின் மூலம், அம்னோ பொதுத் தேர்தலுக்குப் பிறகு ஆறு மாதங்கள் வரை அல்லது அதன் தலைமையின் பதவிக்காலம் முடிவடைந்து 18 மாதங்கள் வரை – எது பின்னர் வந்தாலும் கட்சித் தேர்தலை ஒத்திவைக்கலாம் என்ற மாற்றத்தை கொண்டு வரவிருக்கிறது.
அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான், இந்தத் திருத்தத்தை நிறைவேற்றத் தவறினால், பொதுத் தேர்தலுக்கு முன்னதாக கட்சியில் ஒற்றுமையின்மை ஏற்படலாம் என்றும், அது செப்டம்பர் 2023 நடுப்பகுதிக்குள் நடத்தப்பட வேண்டும் என்றும் எச்சரித்தார்.
2021-2023 காலத்திற்கான அம்னோவின் தேர்தல்கள் கடந்த ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி நடைபெறவிருந்தன. ஆனால் கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த ஆண்டு டிசம்பர் 30 க்கு முன் நடத்தப்பட வேண்டும்.