கடனை செலுத்த அண்ணியின் மோதிரத்தை திருடிய மைத்துனர் கைது

அம்பாங் ஜெயா, தாமான் கெரமாட் பெர்மாய் போலீஸ் குடியிருப்பில் கடனை அடைக்க பணம் தேவை என்று கூறி, உணவு விநியோகம் செய்பவரின் இரண்டு தங்க மோதிரங்களைத் திருடிச் சென்றவர் பிடிப்பட்டார்.

அம்பாங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைமை உதவி ஆணையர் முகமட் ஃபரூக் எஷாக் கூறுகையில், மதியம் 2.30 மணியளவில் 33 வயதுடைய பெண் ஒருவர் வீட்டிற்கு வந்தபோது, ​​முன்பக்க கதவு திறந்து கிடப்பதைக் கண்டார்.

அவர் கூறியபடி, அந்த பெண் உள்ளே சென்று சோதனை செய்தபோது, ​​தண்ணீர் வடிகட்டியில் வைக்கப்பட்டிருந்த இரண்டு தங்க மோதிரங்கள் காணாமல் போனதைக் கண்டார். பின்னர் அவர் போலீஸ் புகாரை பதிவு செய்தார்.

அதனை அடுத்து பாதிக்கப்பட்டவரின் மைத்துனரான 19 வயது இளைஞன் ஜாலான் அம்பாங் புத்ராவில் கைது செய்யப்பட்டார். மேலும் கடை  ரசீது மற்றும்  பணமும் கைப்பற்றப்பட்டது என அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

குற்றவியல் சட்டத்தின் 380ஆவது பிரிவின் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக சந்தேகநபர் மூன்று நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here