சிங்கப்பூரின் முதல் உள்ளூர் குரங்கம்மை தொற்றுக்குள்ளான மலேசிய ஆடவர்

சிங்கப்பூர், ஜூலை 8 :

சிங்கப்பூரில் வசிக்கும் 45 வயது மலேசியர் ஒருவருக்கு கடந்த புதன்கிழமை (6 ஜூலை) குரங்கம்மை நோய்த்தொற்று அறிகுறிகள் காணப்பட்டதாக சிங்கப்பூர் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

இதனைத்தொடர்ந்து உள்ளூரில் முதல் குரங்கம்மை தொற்று சம்பவம் உறுதிசெய்யப்பட்டுள்ளது என்றும் நோய் தொற்றுக்கண்டவர் தற்போது தேசிய தொற்றுநோய்த் தடுப்பு நிலையத்தில் சிகிச்சை பெற்று, சீரான நிலையில் உள்ளார் என்றும் அது மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் இப்போது தொற்றுக்குள்ளான மலேசிய ஆடவருக்கும் சிங்கப்பூரில் கடந்த மாதம் 21-ஆம் தேதி குரங்கம்மை இருப்பதாக உறுதிசெய்யப்பட்ட மற்றொரு ஆடவருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

குரங்கம்மை தொற்றுக்குள்ளான மலேசியரிடம் முதன்முதலில் கடந்த வியாழக்கிழமை (30 ஜூன்) அறிகுறிகள் தென்பட்டன. அவரது கீழ் வயிற்றுப் பகுதியில் தோலில் காயங்கள் தென்பட்டதைத் தொடர்ந்து ஜூலை 4ஆம் தேதி அவருக்கு காய்ச்சல், தொண்டை வலி போன்ற அறிகுறிகளும் தெரிந்தன.

மருத்துவ ஆலோசனையை அணுகிய அவரிடம் சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், குரங்கம்மை தொற்றால் பாதிக்கப்பட்ட மலேசிய ஆடவருடன்நெருங்கிய தொடர்பு உள்ள மூவர் புதன்கிழமை அன்று அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்கள் 21 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here