பாலிங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 534 இல் இருந்து 591 ஆக அதிகரிப்பு

பாலிங், ஜூலை 8 :

பாலிங் மாவட்டத்திலுள்ள மூன்று தற்காலிக நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, நேற்று 108 குடும்பங்களைச் சேர்ந்த 534 பேராக இருந்து, இன்று 124 குடும்பங்களைச் சேர்ந்த 591 பேராக அதிகரித்துள்ளது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி இந்த எண்ணிக்கையை பதிவுசெய்துள்ளது என்று கெடா பேரிடர் மேலாண்மைக் குழு செயலகப் பிரிவுத் தலைவர், மேஜர் (பிஏ) முகமட் முவாஸ் முகமட் யூசாஃப்,தெரிவித்தார்.

செக்கோலா மெனெங்கா கெபாங்சான் (SMK) ஜெராயில் 51 குடும்பங்களைச் சேர்ந்த 159 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் சூராவ் அன் -நூரில் 58 குடும்பங்களில் இருந்து 257 பேரும், செக்கோலா மெனெங்கா அகமா (SMA) யாயாசான் கைரியா, குபாங்கில் இன்னும் 130 பேரும் உள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை நண்பகல் 2 மணிக்குத் தொடங்கி கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் பெய்த கனமழையால், மொத்தம் 12 கிராமங்கள் கடும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு நீரில் மூழ்கின என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here