அலோர் ஸ்டாரில் பல பகுதிகள் திடீர் வெள்ளத்தால் பாதிப்பு

அலோர் ஸ்டார், ஜூலை 12 :

கெடா மாநிலத்தில் இன்று காலை முதல் 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால், அலோர் ஸ்டார் மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இன்று பிற்பகல் 1 மணியளவில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் சுல்தானா பாஹியா நெடுஞ்சாலை பகுதி வழியாக செல்லும் வாகனங்கள் மிக மெதுவாக செல்ல வேண்டியதாக அலோர் ஸ்டார் நகரைச் சுற்றிய ஆய்வுகளில் கண்டறியப்பட்டன.

மேலும், இம்மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக பல குடியிருப்பு பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

குடியிருப்பாளரான அஹ்மட் இக்ராம் அபு தாலிப், 37, என்பவர் கூறுகையில், ஜாலான் லாங்காரில் உள்ள அவரது வீட்டின் பகுதி கணுக்கால் மட்ட வெள்ளத்தில் மூழ்கியிருந்ததுடன், வீட்டிற்குள் தண்ணீர் புகும்வரை மழை நிற்கவில்லை என்று தான் கவலைப்பட்டதாக கூறினார்.

வாய்க்கால்களிலும் தண்ணீர் நிரம்பியதால், வீட்டுமனையில் உள்ள சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது என்றார்.

லங்கார் குடியிருப்பாளரான இஸ்மாயில் அஹ்மட், 60 என்பவர் கூறுகையில், சுங்கை லங்காரின் நீர்மட்டம் கிட்டத்தட்ட நிரம்பியுள்ளதாகவும், ஆற்றின் அருகே வசிக்கும் பெரும்பாலான குடியிருப்பாளர்கள் தங்கள் உடைமைகளை வெளியேற்றுவதற்குத் தயாராகிவிட்டதாகவும் அவர் கூறினார்.

கோத்தா ஸ்டார் மாவட்ட சிவில் பாதுகாப்பு அதிகாரி, கேப்டன் (பிஏ) நார்லிசாவதி இஸ்மாயில் கூறுகையில், வெள்ளம் சூழ்ந்த பகுதியில் இன்று மதியம் 1 மணி முதல் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கம்போங் அலோர் குனுங் பகுதியில் மலேசிய குடிமைத் தற்காப்புப் படையின் கோத்தா ஸ்டார் மாவட்ட உறுப்பினர்கள் மேற்கொண்ட கண்காணிப்பின் முடிவுகளின் அடிப்படையில், இன்று காலை 7.30 மணி முதல் பெய்த கனமழையால் அப்பகுதியில் நீர்மட்டம் உயர்ந்து காணப்பட்டதாக அவர் கூறினார்.

“சுங்கை குனுங்கில் நீர் மட்டம் கட்டுக்குள் உள்ளது, இருப்பினும், APM இந்த நேரத்தில் இன்னும் கண்காணித்து வருகிறது, மேலும் விழிப்புடன் உள்ளது என்றார்.

“இதுவரை, மாவட்டத்தில் எந்த தற்காலிக வெள்ள நிவாரண மையமும் திறக்கப்படவில்லை, மேலும் மாவட்டத்தில் உள்ள மற்ற பகுதிகளிலும் கண்காணிப்பு செயல்படுத்தப்படும்,” என்று அவர் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here