இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை கடலில் அதிகமான அலைகள் ஏற்படக்கூடும்; விழிப்புடன் இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தல்

கோலாலம்பூர், ஜூலை 14 :

இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தீபகற்ப மலேசியாவின் கடற்பிராந்தியத்தில் அதிக அலைகள் ஏற்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், நாடு முழுவதும் உள்ள கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சந்திரன் மற்றும் சூரியனின் ஈர்ப்பு விசையின் தாக்கத்தால் இந்த நிகழ்வு ஏற்படும் என்று தேசிய நீர்வரைவியல் மையம் (PHN) அதன் டூவிட்டர் கணக்கில் வெளியிட்டுள்ள  பதிவின் மூலம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், PHN அதன் முகநூல் பக்கத்தில் தற்போதைய வானிலை நிலைமைகளை எப்போதும் கண்காணிக்கவும் மற்றும் கடலோர பாதுகாப்புடன்  தொடர்புடைய தகவல்களை பார்க்குமாறும் பொதுமக்களை அறிவுறுத்தியது.

“கடற்கரைக்கு அருகில் வசிப்பவர்கள் இந்த நிகழ்வை எதிர்கொள்ளும் வகையில் எச்சரிக்கையுடன் மற்றும் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அலை முன்னறிவிப்பு பற்றிய கூடுதல் தகவல்களை https://hydro.gov.my/ramalanpasangsurut/ எனும் வலைத்தளத்தில் காணலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here