மலேசியா விரும்பினால் பணிப்பெண்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்யலாம் என்கிறது இந்தோனேசியா

இந்தோனேசிய தூதர்

பணிப்பெண்களை தருவிப்பது தொடர்பாக மலேசியாவுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்ய இந்தோனேசியா தயாராக உள்ளது என்று இந்தோனேசிய தூதர் ஹெர்மோனோ தெரிவித்துள்ளார். இந்தோனேசியப் பணிப்பெண்கள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) மலேசியா கடைப்பிடிக்கத் தவறியதே இதற்குக் காரணம் என்றும், மூன்று மாதங்களுக்கு முன்புதான் அது கையெழுத்தானது என்றும் அவர் கூறினார்.

இது சுலபம். புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட இரு அரசுகளும் ஒப்புக்கொண்டதால் கடைபிடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஒரு தரப்பினர் அதை மீறினால், அதை ரத்து செய்யுங்கள் என்று பெரித்தா ஹரியான் அவரை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டிருக்கிறது.

நீங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்துடன் உடன்படவில்லை என்றால், அதை முறித்துக் கொள்ளுங்கள். ஒப்பந்தத்தை ரத்து செய்ய புத்ராஜெயா இந்தோனேசிய தூதரகத்திற்கு ஒரு கடிதத்தை சமர்ப்பிக்குமாறு ஹெர்மோனோ பரிந்துரைத்தார். அதன்பிறகு அந்தக் கடிதம் தனது அரசுக்குத் தெரிவிக்கப்படும் என்றார்.

செவ்வாயன்று, மலேசியாவுக்குள் நுழையும் அனைத்து இந்தோனேசிய தொழிலாளர்களுக்கும் இந்தோனேசியா தற்காலிக முடக்கத்தை விதித்தது. நேற்று, இந்தோனேசியப் பணிப்பெண்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு வசதியாக Maid Online System (MOS) மலேசிய குடிநுழைவுத் துறை தொடர்ந்து பயன்படுத்தியதால் இதைச் செய்ததாக ஹெர்மோனோ கூறினார்.

ஏப்ரல் 1 ஆம் தேதி கையெழுத்தான இந்தோனேசியப் பணிப்பெண்களின் வேலை வாய்ப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் “முழுமையான மீறல்” என்று அவர் கூறினார்.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட Maid Online System (MOS)  தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டதாக தூதுவர் சுட்டிக்காட்டினார். MOS ஆனது இந்தோனேசியத் தொழிலாளர்களை ஒரு சுற்றுலா விசாவைப் பயன்படுத்தி நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கின்றது. இந்த நடைமுறையை ஜகார்த்தா கட்டாய உழைப்பின் ஆபத்து காரணமாக நிறுத்த விரும்புகிறது.

இந்தோனேசியாவின் முடிவைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சர் ஹம்சா ஜைனுடின் மலேசியா மற்ற நாடுகளில் இருந்து வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்தலாம் என்று கூறினார். மலேசியாவிற்கு வேறு 15 மூல நாடுகளைத் தேர்வு செய்ய உள்ளதாக அவர் கூறினார். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சட்டப்பூர்வமாக நாட்டிற்குள் நுழைவதை உறுதி செய்வதில் அமைச்சகம் தீவிரமாக உள்ளது என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here