கெடாவில் பெண்களின் திருமணத்திற்கான குறைந்தபட்ச வயது 18 ஆக உயர்த்தப்பட்டது; அனுமதியின்றி திருமணம் செய்தால் ஓராண்டு சிறை

கெடா மாநில சட்டமன்றத்தில் திருமணம் மற்றும் பலதார மணத்துக்கான வயது வரம்பு தொடர்பான இஸ்லாமிய குடும்பச் சட்டம் (Kedah Darul Aman) சட்டம் 2022 மசோதா 2022 இல் திருத்தத்தை  நிறைவேற்றியுள்ளது. சபாநாயகர் டத்தோ ஜுஹாரி புலாட், பெண்களின் திருமண வயதை 16ல் இருந்து 18 ஆக உயர்த்துவதுடன், நீதிமன்ற அனுமதியின்றி பலதார மணம் செய்து கொண்டால் தண்டனையும் அடங்கும் என்று கூறினார்.

முன்பு 6 மாத சிறைத் தண்டையும் 1,000 வெள்ளி அபராதமாகவும் இருந்தது தற்பொழுது 1 வருட சிறையும் அபராதத் தொகை 3,000ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட வயதிற்கு கீழ்  திருமணம் செய்ய வேண்டுமானால் நீதிமன்றம் மூலம் விண்ணப்பிக்கலாம்.  நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் கருதினால், நீதிமன்ற அனுமதியுடன் திருமணம் செய்து கொள்ளலாம்.

திங்கள்கிழமை (ஜூலை 18)Wisma Darul Amanஇல் நடைபெற்ற மாநிலங்களவை அமர்வுக்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், நீதிமன்றத்தின் அனுமதி இல்லையென்றால், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here